பக்கம்:அழகர் கோயில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 அழகர்கோயில் பொதுவாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் கருவறைக்கென்று தனிப்பெயர் இட்டு அழைக்கும் வழக்கம் இல்லை. இக்கோயில் கருவறைக்கு 'தங்கள் குன்றம்' என்ற பெயர் வழங்குகிறது. அதனுள் அமைத்த வட்டவடிவத் திருச்சுற்றும், 'நங்கள் குன்றம் பிராகாரம் என்றே அழைக்கப்படுகிறது. இப்பெயர் 'நங்கள் குன்றம் கவிடான்'5! என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இக்கோயில் இறைவனின் உலோகத் திருமேனிகள் நான்கில் ஒன்றின் பெயர், 'ஏறு திருவுடையாள்' என்பதாகும். இப்பெயர் ஆண்டாளின் பாசுரத்தில் வரும் தொடராகும். மேலும் சுந்தரத் தோளுடையான்' என்றும் இத்தலத்திறைவனை ஆண்டாள் பாடியதையொட்டி, மற்றொரு திருமேனிக்குச் சுந்தரத்தோளுடையான், என்ற பெயர் வழங்குகிறது. இன்னொரு திருக்களி. 'சோலைமலைக்கரசர்’ என வழங்கப்படுகிறது.66 இவற்றுள் 'ஏறுதிருவுடையான்', 'நலந்திகழ் நாரணன்' எனப் பெயர்பெறும் இரண்டு திருமேனிகளும் வெள்ளியாலானவை. பதும் பீடத்தில், நான்கு திருக்கைகளுடன் 1' 6.5 உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அமைந்த 'சோலைமலைக்கரசர்' என்ற திருமேனி, 'அபரஞ்சி' எனும் தங்கத்தாலானது. தமிழ்நாட்டில் இந்த அளவில் தங்கத்தாலான திருமேனி வேறு கோயில்களில் இருப்பதாகத் தெரியவில்லை. மூந்திருமேனிக்கும் உற்சவத்திருமேனிக்கும் வழங்கும் 'சுந்தரராஜன்' என்ற பெயரும் 'சுந்தரத்தோளுடையான்' என வரும் ஆண்டாளின் பாசுரம் தரும் பெயரை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது. மக்கள் இவ்விறைவனுக்கு வழங்கும் பெயர் 'அழகர்' என்பதே ஊரின் பெயரும் அழகர்கோயில் என்றே வழங்குகிறது. 'அதிர்குரல் சங்கத்து அழகர் தம்கோயில்' என இக்கோயிலை நம்மாழ்வார் பாடுகிறார்.61 ஆழ்வார்களில் தலைமையிடம் பெறும் அவர் வாக்கே, ஊர்ப்பெயராகவும் இறைவன் பெயராகவும் இன்று வழங்குகிறது. 7.11. புறமத எதிர்ப்பு-பாசுரங்களிலும் அவற்றிற்கான உரைகளிலும்: இத்தலம் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வைணவ உரையாசிரியர் தரும் விளக்கம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/47&oldid=1467905" இலிருந்து மீள்விக்கப்பட்டது