பக்கம்:அழகர் கோயில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 அழகர்கோயில் திருமாலையே பணியாளாக ஆண்டமையால் இவர்க்குத் 'திருமாலை ஆண்டால்' என்ற பெயர் ஏற்பட்டது2 என்பது அக்கதையாகும். இக்கதையினை அழகர் கிள்ளைவிடு தூதும், ‘"ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொருப மானநீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில் முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன அந்தன் திருமாலை ஆண்டான்”3 எனக் குறிக்கிறது. இராமானுசர்க்குத் திருமாலை ஆண்டான் திருவாய் மொழி கற்பித்த செய்தியைக் குருபரம்பரை நூல் கூறுகின்றது.5 அச்செய்தியிலிருந்து பிறந்ததே இக்கதையாகும். இக்கதைப்பொருளை 'இராமானுசர்க்காக அவருடைய ஆசிரியர்க்கு இறைவன் செய்த அருள்' என்றோ, 'திராவிட வேதமாகிய திருவாய்மொழியினைக் கற்பித்ததால், திருமாலை' ஆண்டானின் தமிழறிவுக்கு இறைவன் செய்த அருள்' என்றோ விளக்கலாம். ஆனால் இக்கதை, திருமாலை ஆண்டானின் பெயர்ப்பிறப்புக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பெயரில் வரும் 'திருமாலை' என்ற சொல்லுக்கு, 'இறை வனுக்குச் சார்த்தும் பூமாலை' என்பதே பொருளாகும். வடமொழியில் திருமாலையாண்டானுக்கு 'மாலாதரம்' என்ற பெயர் வழங்குகிறது.6 'மாலை' என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான வடசொல் ‘மாலா’ என்பதாகும். 'திருமாலைப் பணிகொண்டவன்' என்ற பொருள் தரும் வடமொழிப்பெயர் ஏதும் இவர்க்கு வழங்கவில்லை. மேலும் குருபரம் யரை நூல் கூறும் வைணவப் பெரியார்களின் பெயர்களை நோக்கும் போது ஒரு செய்தியினை உணரலாம். அவர்களனைவரும் ஆழ்வான், ஆச்சான், ஆண்டான், நம்பி, பட்டர், தாசர் ஆகிய பெயர்களில் ஏதேனும் ஒன்றைத் துணைப்பெயராகக் கொண்டுள்ளனர்.6 பெரியாண்டான் சிறியாண்டான்,முதலியாண்டான், மாருதி ஆண்டான் மாறொன்றில்லா ஆண்டான் முதலிய பெயர்களைக் காணும்போது திருமாலை ஆண்டான்' என்ற பெயரும் அவ்வாறே அமைந்திருக்க வேண்டுமெனத்தோன்றுகிறது. 'ஆண்டார்' என்னும் சொல் கல்வெட்டு களில் பூ இடுவாரைக் குறிப்பதனைத் திருமாலை ஆண்டான் பேரியலுள்ள 'திருமாலை' என்னும் சொல் உறுதிப்படுத்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/61&oldid=1467919" இலிருந்து மீள்விக்கப்பட்டது