பக்கம்:அழகர் கோயில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்டாரும் சமயத்தாரும் 55 எனவே திருமாலை ஆண்டான், இறைவனுக்குத் திருமாலை கட்டித்தரும் பணியினையும் செய்திருக்கலாம்; அதனால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. திருமாலையாண்டான் காலம் ஏறத்தாழக் கி.பி.988 முதல் கி.பி.1073 வரை என்பது வைணவ அறிஞர் கருத்து.' 4.3.ஆண்டார்-பணிகன் : ஆண்டார், தோழப்பர் ஆகிய இரு திருவாகத்தாகும் செய்யும் பணிகள் ‘ஆண்டார் பணிகள்' என்றே பெயர்பெறும். கோயிலில் நாள்தோறும் அருச்சகருக்குப் பளித்திரம் கொடுத்தல் இறைவனுக்குப் புரிநூல் கொடுத்தல், ஒவ்வொரு பூசைக்கும் பஞ்சாங்கம் கணித்துச் சொல்லுதல், கோயிலைப் புண்ணியாவசனம் (ஆகமவிதிப்படி தூய்மை) செய்தல் ஆகியவை மேற்குறித்த இரண்டு நிருவாகத்தாருக்குமுரிய பணியாகும். இவை தவிர தாள்வழிபாட்டிலும் திருவிழாக்களிலும் திருப்பாலை, நித்யானுசந்தானம், சூக்தாதி உபநிஷத்து, திருமஞ்சனஸ்லோகம், அலங்காரஸ்லோகம். திருமஞ் சனகவி, புஷ்பாஞ்சலி, வேதவிண்ணப்பம், இதிகாசபுராாம், ஸ்தலபுராணம் முதலியவற்றை உரிய நேரங்களில் படிப்பதும் இவர்களின் பணியாகும். திருவிழாக்களில் அடியார்,கூட்டமாகத் தமிழ் வேதம் பாடுவதும் இவர்கள் தலைமையில்தான் நடைபெற வேண்டும். திருவிழாக் காலங்களுக்குரிய பொறுப்புக்களையும் யையும் மட்டும் இரு நிருவாகத்தாரும் மாறிமாறிப் பெறுவது வழக்கம். உரிமை ஆண்டுக்கொருவராக கோயில் நடைமுறையும், தொழில், சுதந்திர அட்டவணையும்ச் மேற்குறித்த செய்திகளை உறுதி செய்கின்றன. 4. 4. 'திருமாலை ஆண்டான்’-நிருவாகப் பழமை : "திருமாலை ஆண்டான் பரம்பரைத் தனியன்களும் வாழிந் திருநாமங்களும்’9 என்னும் சிறுநூல் 1975 இல் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/62&oldid=1467920" இலிருந்து மீள்விக்கப்பட்டது