பக்கம்:அழகர் கோயில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 4.6. நடைமுறை வழக்கு : அழகர்கோயில் வைணவ ஆசாரியரான பட்டரை, 'ஸ்ரீரங்கேசப்புரோகிதர்' எனப் பெரிய திருமுடியடைவு கூறும். 1" இதைப்போல அழகள் கோயிலில், திருமாலை ஆண்டான் வழியினர் 'அழகப்புரோகிதர்' என வழங்கப்படுகின்றனர். 20 முதல் திருமாலையாண்டான் ஐப்பசி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்ச துவாதசியில்) காலஞ்சென்றார். ஆண்டுதோறும் இக்கோயில் இறைவன் இந்நாவில் மலைமீதுள்ள அருவிக்கரை சென்று அவரை நினைத்துத் தைலமிட்டு நீராடி வருகின்றார். இவ்விழா தலையருவி உற்சவம் என வழங்கப் படுகிறது. இத்தலத்திறைவனான அழகரை, இந்திரனாக உரு வகிக்கும் அழகம் கிள்ளைவிடு தூது, திருமாலையாண்டானைத் 'தேவ குரு' என்கிறது." முதல் திருமாலையாண்டானுக்கு அழகர் கோயிலில் தனிச் சன்னிதி ஒன்றும் உள்ளது. சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் அழகர் பல்லக்கிற்கு முன் ஆண்டார் பல்லக்கில் செல்வார். குருவின் பின்னால். மாணவர் செல்வதுபோல ஆண்டாரின் பின்னால் இறைவன் வருவார். 'ஆண்டார் முன்னால் அழகர் பின்னால்' என்பது மதுரைப்பகுதியில் வழங்கப்பெறும் ஒரு சொல்லடையாகும். குரு என்பதனால் அடியவர்தம் காணிக்கைகளை இவர் கை நீட்டிப் பெறுவதில்லை. திருவிழாக் காலங்களில் இவர்க்கு முன்னால் ஓர் உண்டியல் வைக்கப்பெற்றிருக்கும். அதிலேயே அடியவர்கள் இவர்க்குரிய காணிக்கையினை இடுவர். 4.7. சமயத்தார்கள் : மதுரை, முகவை மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளில் ஆண்டார்க்கு அடியாரும் பிரதிநிதிகளுமான பதினெட்டுப்பேர் உள்ளனர். இவர்களனைவரும் பிராமணரல்லாத சாதியினர்; ஆண்டார்க்கு இவர்கள் மந்திரியாகவும் தளபதியாகவும் அவருடைய சமய அரசாங்கத்தின் கோமாளிகளாகவும் கூடக் கருதப்படுகின்றனர் இவர்களனைவரும் 'சமயத்தார்' என்ற பொதுப்பெயரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/65&oldid=1467923" இலிருந்து மீள்விக்கப்பட்டது