பக்கம்:அழகர் கோயில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 அழகர்கோயில் சமய ஆட்சிப்பரப்பு வரையறுத்து ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட கிராமத்து மக்களை வைணவ நெறிக்குள் இழுத்துவரும் வாயிலாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆண்டார், அழகர்கோயிலில் குருவாக இருக்கிறார். இவர்கள் ஆண்டாரின் பிரதிநிதியாகத் தங்கள் பகுதி மக்களுக்குக் குருவாக விளங்குகின் றனர். எடுத்துக்காட்டாக, எழுபத்துமூன்று வயது நிரம்பிய ஒரு தகவலாளி, நாற்பது வருடங்களாகக் கையில் நாங்குலிக்கம்பு ஏந்தி, துளசிமாலையணித்து, நெற்றியில் தென்கலைத்திருமண் இட்டு, அழகர்கோயிலுக்கு வந்து சாமியாடி, ஆண்டாரை வணங்கித் திரும்புகிறார். தன்னை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இக் கோயிலுக்கு அழைத்து வந்து ஆண்டாரிடம் 'அக்கினி முத்திரை' (பஞ்ச சம்ஸ்காரம்) செய்வித்தவர் வெள்ளலூர்ச் சமயத்தாரான வெள்ளையத்தாதரே என்கிறார். சமயத்தார் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் திரியெடுத்து வருவோர், தம் சமயத்தாரைச் சந்தித்து அவரிடம் 'முத்திரை பெறுவர். சமயத்தார் கையாலோ. பூ இதழாலோ குங்குமத்தைத் தொட்டு நெற்றியில் திருமண் குறியீடுவார். இதற்குப் 'பூ முத்திரை" எனப் பெயர். அக்கினி முத்திரை, பெரிய முத்திரையென்றும், கட்டி முத்திரையென்றும் வழங்கப்பெறும். இது கோயிலில் மட்டும் நடைபெறும். சங்கு, சக்கர அச்சுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு, அடியவர் (தாசர்கள்) இரு தோளிலும் வைப்பர்; சுடப்பட்ட புண் ஆறியபின்னும் சங்கு சக்கரத் தழும்புகள் அடியவர்கள் சாகும்வரை உடலில் மாறாது இருக்கும். "தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தேநின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு' '24 எனப் பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் இதனைக் குறிப்பர் (படம்': 6). எனவே ஆழ்வார்கள் காலத்திலிருந்து வைணவர்கள் இச்சடங்கினைச் செய்துவருவதையறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/69&oldid=1467928" இலிருந்து மீள்விக்கப்பட்டது