பக்கம்:அழகர் கோயில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயி மிட்டு வழிபடும் முறைகள், காணீக்கை செலுத்துதல் போன்றவை வினாப்பட்டி வழியாகப் பெற்ற செய்திகளைக் கொண்டு விளக்கப்படு கின்றன. 'கோயிற் பணியாளர்கள்' எனும் பத்தாவது இயலில் கோயிற் பரம்பரைப் பணியாளர் பற்றிய ஆவணச் செய்திகளும், நடைமுறை களும் விளக்கப்படுகின்றன.

  • பதினெட்டாம்படிக் கருப்பசாமி' என்னும் பதினோராவது யலில் இக்கோயிலில் அடைக்கப்பட்ட இராசகோபுர வாசலிலுள்ள கருப்பசாமி எனும் தெய்வம் பற்றிய செய்திகள் ஆராயப்படுகின்றன இக்கோயில் கோபுரக் கதவு அடைக்கப்பட்ட செய்தி, கருப்பசாமி யின் தோற்றம் முதலிய செய்திகள் ஆராயப்படுகின்றன.

'முடிவுரை' என்னும் இறுதி இயவில் ஆய்வு முடிவுகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அதனையடுத்துத் துணைநூற் பட்டியல்" தரப்பட்டுள்ளது. பின்னிணைப்பு: 'அழகர்கோயிலில் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இருந்தது' எனும் நம்பிக்கை பின்னிணைப்பில் உள்ள 'ஆறுபடை வீடுகளும் பழமுதிர் சோலையும்' எனும் கட்டுரையில் ஆராயப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பில் உள்ள மற்றொரு கட்டுரையான 'தமிழ்நாட் டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு' உழுதொழில் செய்வோர் பலராம வழிபாட்டின் மூலம் திருமால் நெறிக்குள் அழைத்துவரப்பட் டனர் என ஆய்வுக்கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. ஆய்வாளர் களஆய்வில் ஒலிப்பதிவு செய்த அச்சிடப்படாத ஐந்து வர்ணிப்புப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. சமயத்தாரின் ஆட்சி எல்லைகளை விளக்கும் இரண்டு வரை படங்களும், அழகர்கோயில் அமைப்பினைக் காட்டும் வரைபட மொன்றும் தரப்பட்டுள்ளன. கோயில் அமைப்பு, திருவிழா நிகழ்ச்சிகள் இவற்றுள் சில வற்றைக் காட்டும் புகைப்படங்களும் தரப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/7&oldid=1467860" இலிருந்து மீள்விக்கப்பட்டது