பக்கம்:அழகர் கோயில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்டாரும் சமயத்தாரும் 4.13. தளபதிச் சமயத்தார் ஆட்சி எல்லை : 63 தளபதிகளான சமயத்தாரின் ஆட்சி எல்லைகள் கீழ்க்காணு மாறு வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புமுறை நற்போது (1979) சிதைந்த நிலையில் உள்ளது. ஆயினும் சமயத்தார்கள் தங்கள் ஆட்சிப் பரப்பினை ஓரளவு நினைவில் வைத்திருக்கின்றனர். மணலூர்ச் சமயம் (கள்ளரில் சேர்வை): வண்டியூர்த் தெப்பக்குளத் திற்குக் கிழக்கு, திருப்புவனம் ஊற்றுக்கால் பாலத்திற்கு மேற்கு, வையையாற்றுக்குத் தெற்கு, ஆவியூர்-உப்பிலிக்குண்டுக்கு (அருப்புக் கோட்டையருகே) வடக்கு. கட்டனூர்ச் சமயம் (கோனார்) : பார்த்திபனூருக்கு அருகிலுள்ள அன்னவாசல், மிளகனூருக்கு மேற்கு, திருப்புவனத்துக்குத் தெற் கிலுள்ள அச்சங்குளம், பையனூருக்குக் கிழக்கு, வீரசோழம். அத்திகுளம், நாலூருக்கு வடக்கு, வையையாற்றுக்குத் நெற்கு முடுவார்பட்டிச் சமயம் (அரிசன்): திருப்பாலை, பிள்ளையார் நத்தம், புதுப்பட்டி, ஐயூர், எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, வலையப் பட்டி, விங்காவடி, பெத்தாம்பட்டி, மாலைப்பட்டி, வெளிச்சநத்தம், பரளி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, காவனூர், சுருவனூர், சோழனம் பட்டி, குளமங்கலம், வடுகபட்டி, தூதக்குடி, குமாரம், பளஞ்சி, அலங்காநல்லூள், கல்லணை, ஊர்சேரி, மேட்டுப்பட்டி, அம்பட்டபட்டி சேலார்பட்டி, பூலாம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்கள் காரைச்சேரி சமயம் (அரிசன்): வரிச்சியூர், பறையன்குளம். ஆளவந் தான், குன்னத்தூர், வேலூர், கனிமங்கலம், சக்கிமங்கலம், உடன் குண்டு, ஆண்டார்பட்டினம், கருப்பாயிஊரணி,கோயில்குடி, எலமனூர், பொட்டப்பனையூர், புதூர், மயிலங்குண்டு ஆகிய சிற்றூர்கள் காரைச் சேரிச் சமயத்தார்க்குரியன. சாம்பக்குளம் சமயம் (கோனார்): வடக்கே வையையாறு, கிழக்கே முதுகுளத்தூர், கடுகுசந்தை, மேற்கே பார்த்திபனூர், தெற்கே ராமேசுவரம் இந்நான்கெல்லைக்குட்பட்ட ஊர்கள். 4.14. சமயத்தார் பெறும் மரியாதை : சமயத்தார் அனைவரும் ஆடித்திருவிழாவில் கடைசி நாளன்று ஆண்டாரிடம் பரிவட்ட மரியாதை பெறும் உரிமையுடையவர் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/70&oldid=1467929" இலிருந்து மீள்விக்கப்பட்டது