பக்கம்:அழகர் கோயில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 அழகர்கோயில் சமயத்தார் காலமானால் அவர் குடும்பத்தினர் ஆண்டாருக்குத் 'தகவல் தெரிளித்து', அவரிடமிருந்து பரிவட்டமும், தீர்த்தமும், ஒரு சிறுதொகையும் (பெரும்பாலும் ஒன்றேகால் ரூபாய்) மரியாதை யாகப் பெறுகின்றனர்: இறந்தவர்க்கு அப்பரிவட்டத்தைக் கட்டி தீர்த்தம் தெளிப்பது வழக்கம். கோயில் பரம்பரைப் பணியாளர் இதே மரியாதையினைக் கோயிலிடமிருந்து நேரடியாகப் பெறுவது-இங்கே குறிப்பிடத்தக்கது' 4.15. தளபதிச் சமயத்தார் 'காணிக்கை: தளபதிகளான சமயத்தார், அடியவர்கள் ஆண்டாருக்குச் 'செலுத்தும்' காணிக்கையில் பங்குபெறுகின்றனர். திரியெடுத்தாடு வோர், மாடு கொண்டுவருவோர் ஆகியோர் திருமாளிகைக் கோயிற்} காணிக்கை, ஆண்டார் காணிக்கை, சமயத்தான் காணிக்கை" என மூன்று காணிக்கைகள் செலுத்துவர். பெரும்பாலும் ஒன்றேகால் ரூபாய்தான் காணிக்கை' செலுத்துவர்.' ஆண்டாரிடம் 'அக்கிளி முத்திரை" பெறும் அடியவர்கள் ஆண்டாருக்கும் தங்கள் பகுநியைச் சேர்ந்த சமயத்தாருக்கும் தனித்தனியாகக் காணிக்கை செலுத்துவர். 4.16. சமயத்தாருக்கு. ஆண்டார் தந்த உரிமை: வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை கோயிலுக்கு அப்பன் எருது, குடை எருது கொண்டுவருவோர், கோடாங்கி, றாமதாரிகள், தடிக்கம்பில் வெள்ளிப்பூண் கட்டி கொடுவாள் இடைக் கச்சையோடு கோயிலுக்குத் திரியெடுத்து வருவோர், கூத்தாடிகள், குரங்காட்டிகள் ஆகியோர்க்குத் திருமாலை ஆண்டார் வரி விதித்து அவற்றை வாங்கும் உரிமையை வெள்ளையத்தாதர்க்குத் தந்ததைக் குறிப்பிடுகின்றது. * மேற்குறித்த வரி விதிப்புக்குட்பட்டோர்கள் இக் கோயிலுக்கு வழிபட வரும் அடியவர்கள் என்பது புரிகிறது. இவர்கள் தவிர அம்மன் கொண்டாடி பெண்தெய்வச் சாமியாடுவோர்), அக்கினிச் சட்டியேந்துவோர் (இது இக்கோயிலில் இல்லாத வழி பாட்டுமுறை), பச்சை மோதிரம் போடுவோர் ஆகியோர்க்கும். ஆண்டார் வரி விதித்திருப்பது எந்த அளவு அதிகார்த்தின் (authority) பேரில் என்பது விளங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/71&oldid=1467930" இலிருந்து மீள்விக்கப்பட்டது