பக்கம்:அழகர் கோயில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்டாரும் சமயத்தாரும் 65 தமிழகத்தின் வடமாவட்டங்களில் 'பெருமாள்மாடு' என வழங் கப்பெறும் மாடு, தென்மாவட்டங்களில் 'அழகப்பன் காளை' என வழங்கப்பெறும். இதனை வைத்துப் பிழைக்கும் தெலுங்கு பேசும் சாதியார் (இவர்களிற் சிலர் தங்களைத் 'தாசரிகள்' எனக் கூறு கின்றனர்). இக்கோயிலுக்கு அம்மாட்டைக் கொண்டுவருவது வழக்கம் இதையே பட்டய நகல்ஓலை ‘அப்பன் எருது' எனக் குறிப்பிடுகிறது. குடை எருது என்பது முதுகில் தம்பட்டம் தொங்கவிடப்பட்டு, கிராமங்களிலிருந்து சித்திரைத் திருவிழாவில் இக்கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, நீராட்டித் திரும்ப ஊருக்கு அழைத்துச் செல்லப்பெறும் எருதுகளைப் குறிப்பதாகும். 4.17.இன்றைய நிலை : ஆண்டார் -சமயத்தார் அமைப்புமுறை இன்றைய நிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது நினைக்கத்தகும் செய்தியாகும். இந்த அமைப்புமுறை இப்போது பெருமளவு சிதைந்துவிட் டது. 1977, 1978, 1979 ஆகிய மூன்றாண்டுகளிலும் காலூர், சாம்பக்குளம், மூடுவார்பட்டி, மணலூர், கட்டனூர் ஆகிய ஐந்து தளபதிச் சமயத்தார்கள் மட்டுமே திருவிழாவிற்காக ஆண்டாரிடம் வந்திருந்தனர். மந்திரி, கொடிபிடிப்போர், கோமாளிகள் ஆகிய சமயத்தார்கள் இவ்வமைப்பிலிருந்து ஒதுங்கிவிட்டனர். திருப்புவனம், கலியாந்தூர், கப்பலூர், காரைச்சேரி, மேலமடை, எட்டிமங்கலம், சுந்தரராஜன்பட்டி, பிள்ளையார்பாளையம், வெள்ளலூர் (கூட்டுறவு பட்டி ஆகிய சமயத்தார்களை ஆய்வாளர் அவர்களது ஊருக்குச் சென்றே காணமுடிந்தது; 1977இல் சித்திரைத் திருவிழாவிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் 34-வது தலைமுறையினரான திருமாலை ஆண்டான் நிருவாகத்தார் இறந்துவிட்டார். அவ்வாண்டு அவர் பல்லக்கு ஏறும் மரியாதை உரிமையினையுடையவர். அவர் இறந்து விட்டதால், அவ்வாண்டு அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதுமுதல் திருமாலை ஆண்டான் வழியினர் வாரிசற்றுப் போயினர். 1978இல் பல்லக்குத் சித்திரைத் திருவிழாவில் தோழப்பர் திருவாகத்தார் தூக்குவோருடன் எழுந்த தகராறினால் பல்லக்கில் வரவில்லை. 1979இல் பல்லக்கு ஏறுவது வாரிசற்றுப்போன திருமாலையாண்டார் முறையாகும். எனவே இவ்வாண்டும் ஆந்நிகழ்ச்சி நடைபெற வில்லை. இப்போது உயிருடனுள்ள தோழப்பர் நிருவாகத்தாருக்கும் வாரிசில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/72&oldid=1467932" இலிருந்து மீள்விக்கப்பட்டது