பக்கம்:அழகர் கோயில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 அழகர்கோயில் தொடங்கி இடுப்புவரை அரையாடையாகவும், இடுப்புக்குமேல் மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும். இதுவே கள்ளர் திருக்கோலத் தின் தோற்றமாகும் (படம் 7). 5.1.4. பிராமணப் பணியாளர் கருத்து : 5 இறைவன் இத்திருக்கோலம் பூணுவதற்குக் காரணமாக இக்கோயிற் பிராமணப் பணியாளர் ஒரு கருந்தினைக் கூறுகின்றனர். நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை" என்று பெரியாழ்வாரும். •‘வஞ்சக்கள்வன் மாமாயன்” என்று நம்மாழ்வாரும் இத்தலத்து இறைவனைப் பாடியிருக்கின்றனர். அப்பாசுரங்களின் பொருட்டாகவே அழகர் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது அவர்களின் கருத்தாகும். இக்கருத்து பாசுரங்களுக்கு உயர்வு தரும் அவர்களது மனப்பண்பினைக் காட்டுகிறது. ஆனால் இவ்வேடத்தில் இறைவன் ஏந்தியுள்ள வளரி, சாட்டைக்கம்பு, அணிந்துள்ள கடுக்கன், இட்டுள்ள கொண்டை இவற்றுக்கான காரணங்களை அவர்களால் தரமுடிய வில்லை இவ்வணிகளும், கருவிகளும் கள்ளர் வேடத்தில் பொருளற்ற வையாக இருப்பதாக எண்ணமுடியாது. இவற்றுக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். எனவே பிராமணப் பணியாளர் கருத்து ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை. இக்குறிப்பிட்ட வேடத்திற்கு ஏதேனும் ஒரு பிற்புலம் இருத்தல் வேண்டும். 5.1.5. 'வளரீ” ஒரு விளக்கம்: கள்ளர் திருக்கோலத்தில் அழகர் ஏந்தியுள்ள 'வளரி' குறிப் பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு கருவியாகும். வளதடி எனப்படும் வளரித்தடியினை ஆங்கிலேயர் Vellari Thadi என்றும், Boomerang என்றும் குறிப்பிட்டுள்ளனர். 1. அடிக்கும் கருவிகளும் நசுக்கும் கருவிகளும் (கதை, பூமராங் முதலியன) 2. பிளக்கும் கருவிகளும் வெட்டும் கருவிகளும் (கோடரி, வாள், கத்தி முதலியன) 3. குத்தும் கருவிகள் (ஈட்டி, அம்பு முதலியன) என மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய கருவிகளை மானிட வியலாளர் காலவாரியாக மூன்று வகைப்படுத்துகின்றனர். இவற்றுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/77&oldid=1467938" இலிருந்து மீள்விக்கப்பட்டது