பக்கம்:அழகர் கோயில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 71 வகை 'பூமராங்' எனப்படும் வளரி மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய கருவி இனத்தைச் சார்ந்ததாகும். இவ்வளரியில், இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பவும் எய்தவரிடத்திலேயே வரும் ஒரு யிளை அந்தமான் பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர். இராசபுத னத்தில் 'பில்லர்' எனப்படும் பழங்குடியினர் திரும்பிவரும் அமைப் பீல்லாத வளரியினைப் பயன்படுத்துகின்றனர்.S இப்பொழுது தமிழ்நாட்டில் வளசி பயன்படுத்தப்படவில்லை. மேல்நாட்டுக் கள்ளர் சாதியாரின் வீடுகளிலும் வளரி இப்போது காணக்கிடைக்களில்லை. சிவகங்கை சரித்திர அம்மானை, பெரிய மருது வளரி வீசி மல்லாரிராவ் என்ற தளபதியினைக் கொன்றதனை மேல் செய்வளரி தன்னைத் திருமால் முதலையின் பேசிவிட்ட சக்கரம்போல் பெரியமரு தேந்திரனிவன் வீசி யெறிய விலகாமல் மல்லராவு தலையை நிலைகுலையத் தானறுத்துத் தாங்காமல் வலுவாய் வடகரையின் வாய்க்காலில் போட்டதுவே எனக் குறிக்கிறது. 9 தன்மபுத்திரன் என்பவர் எழுதிய "வாளெழுபது" என்னும் நூலும் வளரியைக் குறிப்பதாக மீ. மனோகரன் குறிப்பிடு கிறார். 19 இச்செய்திகள் வளரி எனும் கருவியின் தொன்மையைப் பற்றியதாகும். 5.1.6. வர்ணிப்பும் கன்னர் வழிமறிப்பு நிகழ்ச்சியும் : அச்சிடப்பட்ட ‘அழகர் வர்ணிப்பு' அழகரின் சித்திரைத் திரு விழா ஊர்வலத்தினை ஒரு காலத்தில் கள்ளர்கள் வழிமறித்த நிகழ்ச்சி யினைச் சொல்கிறது. அழகர், மதுரை வரும் வழியில் கள்ளந்திரி தாண்டி வரும்போது,

    • கள்ளர் வழிமறித்து-காயாம்பு மேனியை கலகமிகச் செய்தார்கள்.

வள்ளலா ரப்போது-நீலமேகம் கள்ளர்களைத் தான்ஜெயிக்க மாயக் கணையெடுத்து - ஆதிமூலம் வரிவில்லில் தான்பூட்டி ஆயர் தொடுத்துவிட -நரசிங்கமூர்த்தி அப்போது கன்னருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/78&oldid=1467939" இலிருந்து மீள்விக்கப்பட்டது