பக்கம்:அழகர் கோயில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 அழகர்கோயில் கண்ணுதெரியாமலப்போ என்செய்வோமென்று கள்ளர் மயங்கிநின்றார். புண்ணாகி நொந்து கள்ளர்-தாயாம்பூ மேனியிடம் புலம்பியே யெல்லாரும். வழிவழி வம்சமாய்- நீலமேகத்திற்கு வந்தடிமை செய்யுகிறோம். ஒளிவு தெரியும்படி-ஆதிமூலம் உம்மாலவிந்த கண்ணை 'திறக்கவேணுமென்று சொல்லி கள்ளர். மார்க்கமுடனே பணிந்தார்"]1 நாட்டுப்புற மக்களிடம் வழங்கும் கதையும்' இதே செய்தியைத் தாள் மாறுதலின்றிச் சொல்கிறது. 12 5.1.7. கள்ளர் வழிமறிப்புச் சடங்கு'! அழகர் வர்ணிப்பு கூறும் இந்நிகழ்ச்சிபோல, இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் ஒரு நிகழ்ச்சி சடங்காக நடத்தப்படுகிறது. மதுரையில் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்து அழகர் தன் கோயிலுக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளத்தில் (இன்றுள்ள மாநகராட்சிக் கட்டிடத்தின் மேற்குவாயில் எதிரில்) சாலையில் கள்ளர் சாதியினர் சிலர் பெருஞ்சத்தத்துடன் பல்லக்கை எதிர்கொண்டு மறித்து, பல்லக்கின் கொம்புகளை 'வாழக்கலை' என்னும் ஈட்டி போன்ற கருவியால் குத்திக்கொண்டு இரண்டு மூன்று முறை பல்லக்கினைச் சுற்றி வருகின்றனர். (படம் 8), இச்சடங்கு நிகழ்ச்சி ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அழகர் வர்ணிப்பு கூறும் கள்ளர் வழிமறித்த நிகழ்ச்சியும். சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் கள்ளர் வழிமறிப்புச் சடங்கும். அழகரின் கள்ளர் வேடத்திற்கும் மதுரை மாவட்டத்தில் அதிகமாக வாழும் கள்ளர் எனப்படும் சாதியினர்க்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன. எனவே கள்ளர் சாதியினர் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. 'தேவர்' என்னும் சாதிப்பட்டம் உடைய புறமலைக்கள்ளர் ‘அம்பலம்' என்னும் பட்டமுடைய மேலூர்ப் 'பகுதிக் கள்ளர்' 'சேர்வை' என்னும் பட்டமுடைய சிவகங்கைக் கள்ளர், புதுக் கோட்டை மாவட்டத்துக் கள்ளர், தஞ்சை மாவட்டத்துக் கள்ளர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/79&oldid=1467940" இலிருந்து மீள்விக்கப்பட்டது