பக்கம்:அழகர் கோயில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 73 கியோரே தமிழ்நாட்டில் 'கள்ளர்' சாதியின் பெரும்பிரிவினராவர். இவர்களில் எப்பிரிவினர் அழகர் கோயிலோடு தொடர்பு கொண்ட வர்கள் எனக் கண்டறிய வேண்டும். தஞ்சை, புதுக்கோட்டை; சிவகங்கைப் பகுதிக் கள்ளர்களுக்கு இக்கோயிலோடு நடைமுறையில் தொடர்பில்லை. நில அமைப்பிலும் அவர்கள் வாழும் பகுதிகள் கோயிலுக்குத் தூரமாகவே அமைந்து விடுகின்றன. அழகர்மலையை ஓட்டி அதன் தென்பகுதியிலும் கீழ்ப்பகுதி யிலும் அம்பலம் எனும் பட்டமுடைய கள்ளரும், அழகர்மலைக்குச் சற்றே தள்ளி மேற்குப்பகுதியில் புறமலைக்கள்ளரும் வாழ்கின்றனர். இவ்விரண்டு பிரிவினரே கள்ளர் சாதியில் இக்கோயிலுக்கருகே வாழ்வோராவர். எனவே இவர்களில் ஒரு பிரிவினரே இக்கோயிலில், தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்க முடியும் எனக் கருதலாம். எனவே இவ்விரு பிரிவினரைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசிய மாகிறது. 5.1.9. மலைக்கள்ளரும் 'நாட்டுக்கள்ளரும் : ' கிள்ளர் எனப்படும் சாதியார் மதுரை மாவட்டத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதியிலும், மேற்கு, தென்மேற்குப் பகுதியிலும் வரழ் கின்றனர். மேற்கு, தென்மேற்குப் பகுதியில் (உசிலம்பட்டி வட்டம் முழுவதும், திருமங்கலம், மதுரை வட்டங்களின் ஒன்றிரு பகுதிகள்) வாழ்கின்றவர்கள் பிரமலை அல்லது பெறமலைக் கள்ளர் எனப்படு வர். குலதெய்வ அடிப்படையில் அமைந்த ஆறுநாட்டுப் பிரிவுகள் இவர்களிடத்துண்டு. மதுரை மாவட்டத்தின் - கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் (மேலூர் வட்டம் முழுவதும், மதுரை, திருப்பத்தூர், சிவகங்கை வட்டங்களின் ஒன்றிரு பகுதிகளில்) வாழ்வோர் நாட்டார்கள்ளர், நாட்டுக்கள்ளர், மேலுர்க்கள்ளர், மேல் நாட்டுக்கள்ளர் எனப் பெயர் பெறுவர். 'கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள, 'கள்ளர் ஜாதி விளக்கம்' என்னும் நூல் புறமலைக்கள்ளரைப் 'பெறமலைக்கள்ளர்' என்றும், மேலூாக் கள்ளரை மேலநாட்டுக்கள்ளர்' என்றும் குறிக்கிறது. 13 இரு பிரிவினரும் மணவுறவு கொள்வது கிடையாது. பெறமலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/80&oldid=1467941" இலிருந்து மீள்விக்கப்பட்டது