பக்கம்:அழகர் கோயில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 அழகர்கோயில் கள்ளாக்குரிய சாதிப்பட்டம் 'தேவர்' என்பதாகும். மேலநாட்டுக் கள்ளர்க்குரிய சாதிப்பட்டம் ‘அம்பலம்' என்பதாகும். மலைக்கள்ளர், நாட்டுக்கள்ளர் என்ற பெயர்களே இவ்விரு பிரிவினரும் முறையே மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள், சமவெளிப் (நாட்டுப்) பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வேறுபாட்டை உணர்த்துவதாக அமைந்திருக் கின்றன. மேலநாட்டுக்கள்ளர்களின் வழிபாட்டில் கள்ளழகரும், அழகர் கோயில் பதினெட்டாம்படிக் கருப்பனும் பேரிடம் பெறுகின்றனர். பெறமலைக்கள்ளர்க்கு நாட்டுப்பிரிவுகளில் அமைந்த குலதெய்வங்கள் உண்டு. பரம்பரையாகப் பெறமலைக்கள்ளர் நாட்டுப் பகுதிகளி லிருந்து அழகர்கோயிலுக்கு வருவோர் மிகச்சிலரே. 1979ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் ஆய்வாளரால் தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடத்தப்பட்ட கணிப்பின்படி அழகர்கோயிலுக்கு வந்த 287 வண்டிகளில் பெறமலைக்கள்ளர் பெரும்பான்மையினராக வாழும் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கருமாத்துர், செக்கானூரணி ஆகிய ஊர்களிலிருந்து வண்டிகள் எதும் வரவில்லை. உசிலம்பட்டி வட்டத்தில் 'மங்கல்ரேவ்' என்ற ஊரிலிருந்து மட்டும் ஒரே ஒரு வண்டி வந்துள்ளது. 14 மேலநாட்டுக் கள்ளரிடத்தும் நாட்டுப்பிரிவுகள் உண்டு. அவை யனைத்தும் மேலூர் வட்டாரத்தைச் சுற்றியே அமைவதால் இவர் களை மேலூரிக்கள்ளர் எனவும் வழங்குவர். கிழக்கேயுள்ள சிவகங் கைப் பகுதியில் சேர்வை' எனும் சாதிப்பட்டமுடைய கள்ளர் வசிப்பதால் இவர்கள் 'மேலநாட்டுக்கள்ளர்' என அழைக்கப்பட் டிருத்தல் வேண்டும். சிவகங்கைக் கள்ளரோடும் இவர்கள் மணவுறவு கொள்வது இல்லை. 5.1.10. நாட்டுக்கள்ளர்- நிலப்பிரிவுகள் ‘அம்பலம்' என்ற பட்டமுடைய மேலநாட்டுக் கள்ளர்க்குரிய நாடுகள் பன்னிரண்டு என்பர். ஆட்சியிலும். ஆவணங்களிலும் அவை வழக்கிழந்ததனால் மக்களிடத்தும் வழக்கிழந்து விட்டன. எனவே அவற்றின் பெயர்களையும் எல்லைகளையும் முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிய இயலவில்லை. சான்றாக, தகவலாளிகள் கூற்றின்படி பரப்பு நாடு வேறு; திருமோகூர் நாடு வேறு. திருவாதவூர் வட்டாரத்தையே அவர்கள் பரப்புநாடு என்கின்றனர். 16 ஆனால் ஒத்தக்கடையிலிருந்து ஒரு கல் தொலைவில் கொடிக்குளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/81&oldid=1467942" இலிருந்து மீள்விக்கப்பட்டது