பக்கம்:அழகர் கோயில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 5.1.11. நாட்டுக்கள்ளரும் நாயக்கராட்சியும் : அழகர்கோயில் நாயக்கராட்சிக்கு முன்னர், மேலநாட்டுக்கள்ளர் சமூகத்தின ரைப் பற்றி அறியப் போதிய சான்றுகளில்லை. நாயக்கராட்சியின் 'போதும் அதற்குப் பின்னரும் மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்து-இவர்கள் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள்.

    • கள்ளர் வண்டார் மக்களையும் கருவறுக்கவே அடங்கான்"?

என்று” தளபதி இராமப்பையனை இராமய்யன் அம்மானை வருணிக் றது: "கான்சாகிபு சண்டை' கதைப்பாடல் அவனைக் “கள்ளரைக் கருவறுத்த தீரன் 18 எனப் பாராட்டுகிறது. மதுரையின் அரசியல் தலைமைக்குக் கள்ளர்கள் தலைவலியாக இருந்ததற்கு இவை சான்று களாகும். மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்து, இந்நாட்டுக் கள்ளர் போராடியதற்கு ஒரு முக்கிய காரணம் தெரிகிறது. தங்கள் பகுதியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும்’ கள்ளர்கள் 'காவல்' என்றொரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதன்படி, ஒவ்வொரு கிராமத்தவரும் தங்கள் உடைமைகள் களவுபோகாமலிருக்கக் கள்ளரில் ஒருசிலரைக் காவலராக ஏற்கவேண்டும். அவர்களுக்கு அதற்காக வரிகூட இவர்கள் செலுத்தவேண்டும். கள்ளர் நாட்டுப் பகுதிகளைக் கடந்துசெல்லும் பயணிகளிடமும் கட்டாயமாக வரி வசூலித்தனர். பிற்காலத்தில் ஐரோப்பியரிடம்கூட இவ்வாறு வசூல் செய்தனர் எனக் கூறும் இந்திய இம்பீரியல் கெசட்டியர் (Imperial Gazetter of :India). 'இது இந்நாட்டின் மிகப்பழைய போலீஸ் முறையில் மிச்சம்” என்றும் குறிப்பிடுகிறது.' 20 மதுரையின் ஆட்சித் தலைமையை ஏற்று அதற்கு வரி செலுத்து வோர் `அனைவரும் கள்ளர்க்கும் வரி செலுத்த உடன்படுவர் என்று கூறமுடியாது. உடன்பட்டு வரி செலுத்தாதவர் உடைமைகள் கள்ளராலேயே களவாடப்பெறும் அல்லது கொள்ளையிடப்பெறும். இதைத் தட்டிக்கேட்கும் பொறுப்பு மதுரையில் அரசியல் தலைமைக்கு உண்டல்லவா? எனவே மதுரை ஆட்சித் தலைமைக்கு இது ஒரு பேரும் பொறுப்பாக உருவெடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/83&oldid=1467944" இலிருந்து மீள்விக்கப்பட்டது