பக்கம்:அழகர் கோயில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 77 இது குறித்து, இராமய்யன் அம்மானை மேலும் ஒரு செய் தியைத் தருகிறது. திருப்புவனத்திலே இருந்த இராமய்யனிடம், கள்ளர் உபத்திரமும் காவலனே யாற்றாமல் மாடுகன்று ஆடு வாய்த்தபணங் காசுமுதல் சீலைத்துணி மங்கிலியம் சேரப் பறிகொடுத்தோம்' 20 என மக்கள் வந்து முறையிட, இராமய்யன் கள்ளர்களின் ஊரான சிறுகுடி சென்று நாடழித்துத் தீக்கொளுத்திக் கள்ளரையும் வெட்டிச் சிறைபிடிக்கிறான். -நாயக்கராட்சியில், கள்ளர்கள் பாளையப்பட்டுப் பிரிவுகளுக்குள் அடங்க மறுத்தனர். தங்கள் மிகப்பழைய நாட்டுப்பிரிவுகளை அங்கீகரிக்கும்படி போராடினர். எனவேதான் சிறுகுடிக்கள்ளர் இராமய்யனைப் பற்றித் திருமலைநாயக்கரிடம் வந்து முறையிடும் போது அவர் இராமய்யனுக்கு, 'கள்ளர் பத்து நாடென்று கனமாய் இருக்கட்டும் 21 என்று ஓலையனுப்புகின்றார். தங்கள் பகுதி பாளையப்பட்டுக்கு உட்படாத பகுதி என்பதைக் காட்டவே தங்கள் எல்லையை அடுத்த கிராமங்களைப் 'பாளையப்பட்டுக் கிராமங்கள்' என்று பேச்சுவழக்கில் முதியவர்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். 5.1.12. நாட்டுக்கள்ளரும் கள்ளர் திருக்கோலமும் : கள்ளர் திருக்கோலத்தில் அழகர் எத்தியுள்ள 'வளரி' என்னும் பழமை வாய்ந்த க்ருவியோடு மேல நாட்டுக் கள்ளருடைய தொடர்பு பல சான்றுகளால் உறுதிப்படுகிறது. 'இந்தியாவிலேயே தமிழ்ப் பகுதியிலேதான்... 1883. மார்ச்சில் சிவகங்கைக்கு அண்மையில் இந்த 'பூமராங்குகள்' பயன்படுத்துவதை நேரில் காணும்' வாய்ப்பு எனக்குக் கிட்டியது" என்று புரூஸ்புட் (Brucefpole), குறிப்பிடுகிறார்.92 "வளரியை அனுப்பிப் பெண்ணை எடு" என்ற பொருளில் மேலநாட்டுக் கள்ளர்களிடையே ஒரு சொல்லடை வழங்கி வந்ததாக (1908) எட்கர் தாஸ்டன் குறிப்பிடுகிறார்." கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள 'கள்ளர் ஜாதி விளக்கம் எனும் நூல், 'மேல நாட்டுக் கள்ளருடைய சங்கதி' என்ற தலைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/84&oldid=1467945" இலிருந்து மீள்விக்கப்பட்டது