பக்கம்:அழகர் கோயில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 அழகர்கோயில் "...அப்பால் மாப்பிள்ளையுடைய உடன் பிறந்தவன் பெண்வீட்டுக்குப் போய் பரிசங் கொடுத்து, ஒரு சீலையுங் கொடுத்து குநிரைமயிர் காணணி பெண்ணுக்குத் தாலி கட்டி வளைத்தடி மாற்றிக்கொண்டு பெண்ணையுங் கூட்டிக்கொண்டு உறவு முறையாருடனே வருகிறது" என்று திருமணச் சடங்குகளை விளக்குகிறது 24 திருமணத்தில் வளைத்தடி மாற்றிக்கொள்ளும் வழக்கம் சிவகங்கைக்கள்ளரிடத்தோ பெறமலைக்கள்ளரிடத்திலோ இருந்ததில்லை என்பது குறிக்கத்தகும் செய்தியாகும். மேலநாட்டுக் கள்ளரிடத்தும் திருமணத்நில் வளைத்தடி மாற்றிக்கொள்ளும் வழக்கம் இப்போது மறைந்துபோய்விட்டது. கள்வர் திருக்கோலத்தில் அழகடுக்கு இடப்படும் கொண்டையும் மேல்நாட்டுக்கள்ளர் சாதியில் ஆண்கள் இடுகின்ற கொண்டையே. சாதாரணமாகப் பெண்கள் இடுகின்ற கொண்டையைப்போல் பிடரியின் கீழ்ப்பகுதியில் தொடங்கி தோளை நோக்கிச் சரித்ததாக இல்லாமல் பீடரியீன் நடுப்பகுதியில் இக்கொண்டை தேரானதாக அமைந் துள்ளது.இப்பிரிவினரில் மிக அரிதாக ஓரிரு முதியவர்கள் இப்பொழுதும் இவ்வகைக் கொண்டை இட்டிருக்கிறார்கள். நெல்சன் (Nelson) "கள்ளச்சாதியில் 15 வயது ஆன ஆண்மகள், தான் விரும்புமளவு முடி வளர்த்துக்கொள்ளலாம். சிறு பையன்களுக்கு இந்த உரிமை இல்லை” என்று குறிப்பிடுவது25 இப்பிரிவினரில் ஆண்கள் கொண்டை இடும் வழக்கத்தை உறுதிப்படுத்துகிறது. கள்ளர் திருக்கோலத்தில் அழகருக்கு அணியப்பெறும் கடுக்கன் சற்றுப் பெரிய வளையமாக அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. மேலநாட்டுக் கள்ளரின் ஆண்கள் மட்டுமே அணியும் இக்கடுக்கனுக்கு, 'வண்டிக்கடுக்கன்' என்று பெயர். மேற்குறித்த சான்றுகளால், அழகர் மேலநாட்டுக்கள்ளர் சாதியைச் சேர்ந்த ஆண்மகளைப் போலவே தோற்றம் புனைந்து வருவது உறுதிப்படுகிறது. 5.1.13 வழிமறித்த ஊரினர்: நாட்டுக்கள்ளரிலும் அழகர் ஊர்வலத்தை மறித்தவர் எந்தப் பகுதியினைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படவேண்டிய செய்தியாகும். தல்லாகுளத்தில் இன்றளவும் பல்லக்கை மறித்து 'வாழக்கலை என்னும் ஆயுதத்தால் தாக்கும் நிகழ்ச்சியில் மாங்குளம் கிராமத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/85&oldid=1467946" இலிருந்து மீள்விக்கப்பட்டது