பக்கம்:அழகர் கோயில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 அழகர்கோயில் அழகர்கோயிலுக்குத் தென் இச்செய்திகள் அனைத்தும் கிழக்காக ஏறத்தாழ மூன்று கல் தொலைவிலுள்ள மாங்குளம் கிராமத் தைச் சேர்ந்த கள்ளர்களே அழகர்கோயில் இறைவன் ஊர்வலத்தை வழிமறித்துக் கொள்ளையிட முயன்றவர்கள் என்பதனை விளக்கும் சான்றுகளாக அமைகின்றன. 5.1.14. நாட்டுக்கள்ளர் - கோயில் நடைமுறைத் தொடர்பு: அழகர்கோயில் தேரோட்டத்தில், தேர் இழுக்கும் பொறுப்பு நாட்டுக்கள்ளர் ` கிராமங்களுக்கு உண்டு. 'முதல் வடம் வெள்ளியக் குன்றம் ஐமீன் கிராமங்களுக்குரியது. பிற மூன்று *வடங்களை இழுக்கும் பொறுப்பு முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு. மேலத்தெரு ஆகிய கிராமப் பிரிவுகளுக்குரியது. இத்தெருப்பிரிவுகள் நாட்டுக்கள்ளர்க்குரியது என்று முன்னர் கண்டோம். ஒவ்வொன்றும் சில ஊர்களை உள்ளடக்கிய இப்பிரிவுகளை, கோயில் அப்படியே ஏற்றுக்கொண்டு தேரிழுக்கும் பொறுப்பைத் தந்திருப்பதாகவே தெரிகிறது. கள்ளரின் சமூக, பொருளாதார அமைப்பில் இக்கோயிலின் செல்வாக்குக்கு மேலும் ஒரு சான்றுண்டு. தேரிழுக்கும் முன்னர் இம். மூன்று பிரிவைச் சேர்ந்தவர்களும் தேருக்குமுன் ஒன்றுகூடிக் 'கூட்டம்' நடத்துகின்றனர். 'நாட்டார் கூட்டம்' எனப்படும் இக்கூட்டத்தில், தங்கள் ஊர்களுக்கிடையிலுள்ள தகராறுகளைப் பேசித் தீர்வு காண் கின்றனர். பின்னரே தேரோட்டம் தொடங்குகிறது. இப்பொழுது பெரும்பாலும் இத்தகராறுகள் ஏதேனும் ஒரு பிரிவினருக்குள் அந்த ஆண்டுக்குக் கோயில் மரியாதையினைத் தங்களில் யார் பெறுவது என்பதாகவே இருக்கின்றன. அருகருகே உள்ள இரண்டு கிராமத்தார்களுக்குள் கண்மாய்களில் மீன்பிடிக்கும் அல்லது ஏலம் எடுக்கும் உரிமையும் அடிக்கடி சிக்கலுக்குப் பொரு ளாகிறது. வைகைக்கால் சீரமைப்புக்குப்பின் வயலுக்கு நீர் இறைக்கும் உரிமை தொடர்பான சிக்கல்கள் வருவதில்லை என முதியவர்கள் கூறுகின்றனர். 1978 ஆம் ஆண்டு தேரோட்டத்திற்குக் குறித்த நன்னேரம் தவறியும், மேலத்தெருக்காரர்களுக்குள் கோயில் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தேர் புறப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/87&oldid=1467948" இலிருந்து மீள்விக்கப்பட்டது