பக்கம்:அழகர் கோயில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 5.1.15. வரலாற்றில் சில ஊகங்கள் : 81 ராபர்ட் சுவெல் தொகுத்த தென்னிந்தியச் சாசனங்களில் ஒன்று அழகர்கோயிலில் (கி.பி. 1606இல்) கலி 4707 இல் நடந்த ஒரு பஞ்சாயத்தில் நாயக்கர், கவுண்டர் இவர்களோடு அம்பலக் காரரும் (நாட்டுக்கள்ளரின் சாதிப்பட்டம் இது) கலந்துகொண்ட தாகக் குறிக்கிறது.29 இது உண்மையாயின் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னரே இக்கோயிலோடு கள்ளர் நல்லுறவு கொண்டி ருந்தனர் என்பதற்குச் சான்றாகும். ஏனெனில் இது கோயில் ஊழியர்க்கிடையே எழுந்த ஒரு வழக்கைத் தீர்க்கும் பஞ்சாயத்தாகும். எனவே கோயிலோடு உறவுகொண்டிருந்தோரே இதில் கலந்து கொண்டிருக்க இயலும். ஆனால் இப்பட்டயம் கலி 4707 ஆம் வருடத்தை 'ஆனந்த வருடம் எனக் குறிக்கிறது. இவையிரண்டும் பொருந்தி வரவில்லை. கலி 4707 ஆம் வருடம் 'பராபவ' அல்லது 'பிங்கல' வருடம் ஆக வேண்டும்; 'ஆனந்த' வருடம் ஆகாது. எனவே இப்பட்டயம் உண்மையானது எனக் கொள்ளுதற்கில்லை. சகம் 1591 இல் (கி.பி. 1669இல்) வெள்ளியக்குன்றம் ஜமீன் தாருக்குத் திருமலை நாயக்கர் வழங்கிய செப்புப்பட்டயம், இக் கோயிலில் வேடர்கள் புகுந்து கொள்ளையிட்டதையும், ஜமீன்தார் அவர்களைப் பிடித்து வெட்டியதையும், அதற்காகத் திருமலை நாயக்கர் ஜமீன்தாருக்கு மானியம் வழங்கியதையும் குறிப்பிடுகிறது. 30 இப்பட்டயம் குறிப்பிடும் வேடர், 'வலையர்’ எனப்படும் சாதியினர் ஆவர். 'மூப்பனார்' என்ற சாதிப்பட்டத்தை உடையவர் களாய் அழகர்மலை அடிவாரக் கிராமங்களில் இச்சாதியினர் இன்றும் மிகுதியாக வாழ்கின்றனர். குளம் குட்டைகளிலும் வயல்களிலும் வலைகட்டி மீன், எலி இவற்றைப் பிடித்துண்ணும் இச்சாதியினர், இப்போது பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளளர். இவர் களின் சமூக மதிப்பு (Social steus) அரிசனங்களைவிடச் சற்றே உயர்ந்ததாக உள்ளது. வலையர்களைவிட எண்ணிக்கை வலிமையும் (numerical strength} போர்க்குணமும் உடைய மேலநாட்டுக்கள்ளர் பட்டயம் குறிப்பிடும் காலத்தில் கோயிலோடு உறவுகொண்டிருப்பின் வலை யர்கள் கோயிலைக் கொள்ளையிடத் துணிந்திருக்கமாட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/88&oldid=1467949" இலிருந்து மீள்விக்கப்பட்டது