பக்கம்:அழகர் கோயில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 அழகர்கோயில் நாயக்கராட்சிக் காலத்தில் சமயம் பரப்ப வந்த கிறித்துவப் பாதிரியான மார்ட்டின் அடிகளார் கி. பி. 1700இல் எழுதிய கடித மொன்றில், முந்திய இரண்டாண்டுகளில் மதுரையின் அரசுரிமை தனக்கே எனக் கிளம்பிய ஓர் இளவரசனுடன் கள்ளர்கள் சேர்ந்து கொண்டு மதுரைக் கோட்டையினையும் நகரத்தினையும் பிடித்துக் கொண்டதனையும், மிகவிரைவில் அதனை இழத்து விட்டதனையும் குறிப்பிடுகிறார். 35 அவரே கி.பி. 1709இல் எழுதிய மற்றொரு சுடிதந்தில் முந்திய ஐந்தாறு ஆண்டுகளில் மதுரையிலிருந்த இளவரசன் கள்ளர்களை அடக்கப் பெருமுயற்சி செய்ததனையும் அவர்களை அடக்க அவன் கட்டிய ஒரு கோட்டையினை அவர்கள் வெற்றி கொண்டதனையும் குறிப்பிடுகிறார்.35 கி.பி.1692 முதல் 1706 வரை இராணிமங்கம்மாளும், கி.பி. 1706 முதல் கி.பி. 1732 வரை விசயரங்க சொக்கநாதனும் மதுரை நாயக்கராட்சிக்குந் தலைமை ஏற்றிருந்தனர். மார்ட்டின் அடிகளாரின் முதல் கடிதம் மங்கம்மாளின் ஆட்சியிலும், இரண்டாம் கடிதம் விசயரங்க சொக்கநாதனின் ஆட்சிக்காலத்திலும் எழுதப்பட்டவை. நாயக்கராட்சிக் காலத்தில் கள்ளர்களைப் போராடி வென்ற மதுரைவீரன் என்னும் வீரனின் கதையினைப் பாடும் 'மதுரைவீர சுவாமி கதை மார்ட்டின் அடிகளாருடைய கடிதச் செய்திகளை உறுதிப்படுத்தும் சில செய்திகளைத் தருகிறது. இந்நூலின் கடவுள் வணக்கப் பாடல் மதுரைவீரன், "நிறைபுகழ் பெரும் விஜயரெங்கனெனு மன்னனது நீள்வாயில் காவல் செய்து"37 வந்தவன் எனக் குறிப்பிடுவதிலிருந்து மதுரைவீரன் கள்ளர்களோடு போரிட்டது இவனது ஆட்சிக்காலத்தில்தான் என அறியலாம். தன் ஆட்சியில் விசயரெங்கச் சொக்கநாதன், தலைநகரை மதுரையை விட்டுத் திருச்சிக்கு மாற்றினான். திருச்சியிலிருந்து விசயரெங்க சொக்கதாதனுக்கு மதுரையிலிருந்து, “தன்னரசு நாட்டுத் தனிக்காட்டுக் கள்ளரெல்லாம் காட்டிலுலுள்ள கள்ளரெல்லாம் நலமாகக் கூட்டமிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/91&oldid=1467952" இலிருந்து மீள்விக்கப்பட்டது