பக்கம்:அழகர் கோயில்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 அழகர்கோயில் தொடர்பிருந்தும் இச்சாதியினரில் ஒருவர் மட்டுமே சமயத்தாராக இருப்பது சிந்திப்பதற்குரியது. 1979 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் வேடமிட்டு வழி படும் அடியவரிடத்தில் ஆய்வாளர் நடத்திய களஆய்வில், இச்சாதி யினர் ஒரு விழுக்காடே வேடமிட்டு வழிபடுகின்றனர் என்ற முடிவே கிடைத்தது.42 எனவே அழகர்கோயில் இறைவனை வழிபட்டாலும், முத்திரைபெற்ற வைணவ அடியாராகி வைணவ சமய எல்லைக்குள் புகுவதில் இச்சாதியினர் நாட்டம் கொள்ளவில்லை எனத்தெரிகிறது. மக்கட் பெயர் வழக்கிலும், இச்சாதியினரிடத்தில் பெரியகருப்பன், சின்னக்கருப்பன், நல்லகருப்பன் முதலிய பெயர்களே பெருவழக்காக இருப்பதனையும் ஆய்வாளர் களஆய்வில் காணமுடிந்தது. எனவே அழகர்கோயிலில் திருமாலைவிடவும், பதினெட்டாம் படிக் கருப்பசாமியே இவர்களின் வழிபாட்டுக்குப் பெரிதும் உரியவராக விளங்குகின்றார் என்று கருத இயலுகிறது. 'கள்ளர்களின் குலதெய்வம் கருப்பகாமி` என்று டென்னிஸ் அட்சனும்,43 கள்ளர் நாட்டிலேயே கருப்பசாமி பெரிதும் வழிபடப்பெறுகிறார் என்று ராதாகிருஷ்ணனும்44 குறிப்பிடுவது ஏற்புடைய கருத்தாகவே தோன்றுகிறது. குறிப்புகள் 1. Copy of the Register of Inams, issued by the Madurai Collectorate, dated 13.2.1864, Column No.21. 2 திருமாலிருஞ்சோலைமலை அழகர்மாலை, கையெழுத்துப்படி, R 8551, கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை, பாடல்கள் 47 & 12. 3. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, ராம.குருசாமிக்கோளார் வெளியீடு. ப. 19: சாமிக்கண்ணுக்கோனார், தசாவதார வர் ணிப்பு, ப 1. 4. அழகர்கோயில் சித்திரைப் 1977, ப 1. பெருந்திருவிழா அழைப்பிதழ், 5. சீனிவாசையங்கார் - அழகர்கோயிற் பணி யாளர், நாள் : 10-6-1977. இராகவையங்கார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/93&oldid=1467954" இலிருந்து மீள்விக்கப்பட்டது