பக்கம்:அழகர் கோயில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5.2. கோயிலும் இடையரும் 5.2.0 அழகர்கோயில் இறைவனை வழிபடும் அடியவரில் இடையர் சாதியினரைப் பெருந்தொகையிளராகக் காணலாம். ஆய்லாளர் சித்திரைத் திருவிழாவில் நடத்திய களஆய்வில், வேடமிட்டு வழி படும் அடியவரில் முப்பத்துமூன்று விழுக்காட்டினர்(33%) இடையர் சாதியினராக இருப்பதை அறியமுடிந்தது.' அழகரின் சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் கலந்துகொள்வோரில் இச்சாதியினர் மிகுதி யும் இருப்பதை டென்னிஸ் அட்சனும் குறிப்பிடுகிறார்.2 அழகர் கோயிலோடு இச்சாதியினர் கொண்டுள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். 5.2.1. இடையர்கள்:

    • வாடாச்சீர்த் தென்னவன்

தொல்லிசைநட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்8 எனக் கலித்தொகைப் பாடல் ஒன்று பாண்டியரோடு தோன் றியதாக இச்சாதியினரின் தொன்மையைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் காணப்பெறும் கோவலர், இடையர், அண்டர் என்ற மூன்று சொற்களும் ஆயர்களில் மூன்று பிரிவினரைக் குறித்திருத்தல் வேண்டு மென மாணிக்கவாசகம் பிள்ளை கருதுகிறார்.' பத்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தில் கால்,நடை வளர்க்கும் தொழிலை மேற்கொண்ட எல்லாச் சாதியினரும் இடையர் என்ற பிரிவிலடங்கியதாகச் சீனி வாச ஐயங்கார் கூறுகிறார்.5 ஆயிலும் அவர் தம் கருத்துக்குச் சான்றுகளேதும் தரவில்லை. 5.2.2. இடையர்கள் அனைவரும் வைணவரா?: தொல்காப்பியம் முல்லைநில மக்களாகிய ஆயர்களின் தெய்வ மாகத் திருமாலைக் குறிக்கிறது.6 திருப்பாவையில் கண்ணனை அடைய நோன்பு நோற்கும் ஆண்டாள், தன்னை ஓர் இடைச்சிறு பியாகக் கற்பளை செய்துகொள்கிறாள். இவை போன்ற செய்தி கள் தமிழகத்தில், "இடையர்களனைவரும் வைணவர்களே என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/98&oldid=1467960" இலிருந்து மீள்விக்கப்பட்டது