பக்கம்:அழகர் கோயில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 அழகர்கோயில் போன்ற ஒரு கருத்தினை உருவாக்குகின்றன. இக்கருத்தினை அப்படியே ஏற்கவியலாது. 5.2.3. கோயில்களும் இடையரும் : கோயில்கள் கற்றளிகளாகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் எழுந்தபோது கோயில்களோடு இச்சாதியினர் தொடர்பு மிகநெருக்க மாயிற்று. கோயில்களில் நந்தா விளக்கிற்கு நெய்வழங்கி, விளக் கேற்ற விரும்புவோர் தரும் ஆடுமாடுகள் இச்சாதியாரிடமே ஒப்படைக்கப்பட்டன. பாண்டியர் கல்வெட்டுக்களில் இப்பணியினல் 'வெட்டிக்குடி' என்று அழைக்கப்பெறுகின்றனர்.8 சைவ, வைணவ வேறுபாடின்றி எல்லாக் கோயில்களிலும் இவர்கள் இப்பணியினைச் செய்துள்ளனர். தஞ்சைப் பெருவுடையார்கோயில் கல்வெட்டுக்களில் முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வாறு நெய்வழங்க ஒப்புக்கொண்டு ஆடுமாடுகளைப் பெற்ற நூற்றுக்கணக்கான இடையர்களின் பெயர் கள் காணப்படுகின்றன. இப்பெயர்களில் வைணவப் பெயர்கள் மட்டுமின்றிப் பனையன் வெண்காடன், முனையன் ஆரூர், நீலகண் டன் நரியன் எனச் சைவப் பெயர்களும் காணப்படுவதால், இச் சாதியினர் வைணவராக மட்டுமே தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் எனக் கொள்வதற்கில்லை. சிலப்பதிகாரத்தில் திருமாலை எண்ணிக் குரவையாடுகின்ற மாதரி, புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்து" வரும் செய்தியையும் இளங்கோ அடிகள் காட்டுவதால் இடையர்கள் பெருந்தெய்வங்களோடு சிறுதெய்வங்களையும் வணங்கிய செய்தியை அறியலாம். 5.2.4. இடையரும் வைணவமும் : "இடையர்கள் வைணவர்கள். அவர்களில் நாகரிகமுடயை சிலர் வைணவப் பிராமணரைப் போல முத்திரை (branding) பெறு கின்றனர் என்று தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். 11 தமிழ்நாட்டு வைணவத் தலங்களில் பெரும்பாலானவற்றில் இவர்கள் ஈடுபாடு கொள்வதைக் காணலாம். தஞ்சை மாவட்டத்தில் தேரெழுந்தூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/99&oldid=1467961" இலிருந்து மீள்விக்கப்பட்டது