உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அழகு மயக்கம்

 மாதவன். மோகன், பார்த்தீர்களா, உங்கள் சிஷ்யை இப்பொழுது எப்படிப் பேசுகிறாள் என்று?

மோகன்: நீங்கள் அவசியம் அனுப்ப வேண்டும் என்றால் அவள் பேசாமல் ஒப்புக் கொள்ளுகிறாள். லலிதாவுக்கு மிகுந்த ஆசை.

மாதவன்: இருந்தாலும் தாய்க்குள்ள உரிமையை நான் பறித்துக் கொள்ள முடியுமா?

மோகன்: லலிகா இஷ்டப்படும் போது அவளுடைய ஆசையையும் கவனிக்க வேண்டும் அல்லவா?

லகஷ்மி: (சட்டென்று) அவள் இஷ்டப் பட்டதை யெல்லாம் செய்யும்படி விட முடியுமா? அவளுக்கு என்ன தெரியும்?

லலிதா: (லக்ஷ்மி அருகில் வந்து நின்று) இதில் என்ன தவறு இருக்கிறது அம்மா? தவறு இருந்தால் அப்பா சம்மதிப்பாரா?

லஷ்மி: அப்பாவுக்கு என்ன? அவர் எதற்கும் சம்மதிப்பார்.

மாதவன்: என்ன லக்ஷ்மி, என்மீது ஏதோ குற்றம் சுமத்தப் பார்க்கிறாயே! நாட்டியம் ஒரு நல்ல கலை; அதை நீயே அறிந்திருக்கிறாய். உன்னுடைய குருவி னிடமே உன் மகளும் சிலவற்றைக் கற்றுக் கொள்ளட்டும் என்றுதானே சொல்லுகிறேன்? அதில் என்ன தவறு?

மோகன்: அப்படிச் சொல்லுங்கள், அதுதான் சரி.
லஷ்மி: (உறுதியாக) நீங்கள் என்ன சொன்னாலும் சரி. எனக்குக் கொஞ்சங் கூடச் சம்மதம் இல்லை.

[வேலைக்காரன் கதவருகே வந்து
நிற்கிறான்.]

லலிதா: (திரும்பிப் பார்த்து) என்ன முனிசாமி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/100&oldid=1769036" இலிருந்து மீள்விக்கப்பட்டது