அழகு மயக்கம்
7
முருகன் : இந்தக் கல்லூரிப் பெண்களைப் பேச்சில் வெல்லவே முடியாது.
வசந்தா : நாங்கள் வெறும் வாயாடிகள் என்கிறீர்களோ?
முருகன் : (சிரித்துக்கொண்டே) வசந்தா, சினிமாவுக்கு நேரமாகவில்லையா? பேசிக்கொண்டே மெதுவாக நடக்கலாமே!
[எழுந்து புறப்பட் ஆயத்தம் செய்கிறான்.]
வசந்தா : எந்த சினிமாவுக்குப் போகலாம்?
முருகன்: எதற்கு வேண்டுமானாலும் போகலாம். எனக்கு எல்லாம் ஒன்றுதான். நான் ஒன்றைத்தானே எங்கே போனாலும் பார்க்கப் போகிறேன்?
வசந்தா : அதென்னவோ?
முருகன் : நீ சினிமாப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உனது வடிவழகைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வசந்தா : என்னைத்தான் வாயாடி என்று சொன்னீர்கள். ஆனால், இப்பொழுது....
[சிரிக்கிறாள்]
முருகன் : உன தழகைப் பேச ஒரு வாய் போகாதே!
வசந்தா : புகழ்ச்சி யெல்லாம் போதும். வாருங்கள் போகலாம்.
முருகன் : (மேலங்கியை அணிந்து கொண்டே) அன்றைக்கு கடந்த தேநீர் விருத்தை நான் மறக்கவே முடியாது.
வசந்தா : ஏன்? தேநீர் ரொம்ப நன்றாக இருந்ததோ?