உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகு மயக்கம்

வசந்தா: எப்படி ? நான் உங்களிடம் தாராளமாகப் பழகுவதிலிருந்தா?

முருகன்: வசந்தா, இன்னும் என்னைச் சோதனை செய்ய வேண்டாம். நான் உனக்கு அடிமை.

வசந்தா: முருகா, நான் உங்கள் கலைத்திறமையைப் போற்றுகிறேன். அதற்காக உங்களிடம் தனிப்பட்ட மதிப்பும் கொண்டிருக்கிறேன். ஆனால்........

முருகன் : இப்பொழுதுதான் உனது உள்ளத்தில் உள்ள அன்பைச் சிறிது வெளியிட ஆரம்பித்திருக்கிறாய். அன்பே, நீயும் நானுமாக...

[அருகே வர முயலுகிறான்.]

வசந்தா: (மிடுக்காக) நீங்கள் அங்கேயே நின்று பேசுங்கள். உங்கள் கலைத் திறமைக்கு மரியாதை செலுத்துகிறேனே ஒழிய, உங்கள் உள்ளப் பான்மையை நான் போற்றவில்லை.

முருகன் : காதலால் வாடும் உள்ளத்தின்மேல் உனக்கு அதுதாபம் இல்லையா?

வசந்தா: நீங்கள் காதல் என்று சொல்வதெல்லாம் என்ன வென்று எனக்குக் தெரியும். எங்கே அழகைக் கண்டாலும் அதில் நீங்கள் ஆசை கொள்ளுவீர்கள். ஆனால் அது காதலல்ல.

முருகன்: வசந்தா, நான் கூறுவது சத்தியம். என்மீது உனக்கு.....

வசந்தா: என் தோழி கமலாவிடமும் அப்படித்தான் கூறினீர்கள். அவள் இந்த இடத்தை விட்டுப்போய் மூன்று வாரங்கள் கூட ஆகவில்லையே!

முருகன்: (திகைப்புடன்) கமலா உன் தோழியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/23&oldid=1638053" இலிருந்து மீள்விக்கப்பட்டது