பக்கம்:அழகு மயக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அழகு மயக்கம்

மங்கை : இதோ ஊர் வந்தாயிற்று, பாட்டி. நீங்கள் போகிறீர்களா ? என் சிநேகிதி வீட்டிற்கு இந்தப்

பக்கம் போகவேண்டும்.

கிழவி : ஊருக்கு வந்துவிட்டோம். பேசிக்கொண்டே வக்கதில் சலிப்பே தெரியவில்லை. நீ சகமாக இருக்க வேணும். போகிருயா ? ஏன், நீயும் என்கூட வாக் கூடாதா ? கல்யாண வீட்டுக்கு வந்துவிட்டுப் போனுல் போகிறது. இந்த இருட்டிலே எப்படி உன் சிநேகிதி விட்டுக்குப் போவாய் ?

ளமங்கை : போய் விடுவேன். அவள் தனியாகத்தான் வசிக்கிருள். வீட்டிலே வேறு யாரும கிடையாது.

கிழவி : சாக்கிாதையாகப் போ அம்மா. நீ ரொம்ப நல்ல பெண்ணுக இருக்கிருய். என் போனுக்குக் கிடைக்கிற பெண்ணும் உன்னைப்போல இருக்கவேனும்.

இளமங்கை போய் வருகிறேன் பாட்டி.

(இருவரும் பிரித்து வேறு வேறு

வீதிகளில் போகிரு.ர்கள்.)

காட்சி இரண்டு

அதே இரவு. சுமார் நான்கு மணி இருக்கும். ஒரு கிரா மாந்தர வீடு. லாந்தர் விளக்கு மங்கலாக எரிந்துகொண் டிருக்கிறது. வீட்டின் இடது புறத்திலிருந்த கதவை வெளியிலிருந்து யாரோ மெதுவாகத் தட்டுகிருர்கள். அக்கா, அக்கா என்ற குரல் கேட்கிறது. மறுபடியும் மெது வாகத் தட்டும் சப்தம். கட்டிலில் படுத்திருந்த ஒரு விதவை எழுந்து கவனித்துக் கேட்கிருள். பிறகு கதவின்_அருதே அருகிருள். அவளுக்கு வயது முப்பத்தைந்து இருக்கும். வெள்ளே உடை தரித்திருக்கிருள். வாழ்வில் இன்பம் காணு தவள் என்பதை அவள் முகம் காண்பிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/32&oldid=533810" இலிருந்து மீள்விக்கப்பட்டது