26
அழகு மயக்கம்
றிலும் உள்ளவர்களுடைய உதவியில்லாமல் இங்கு முடியுமா? அவர் என்னை மறந்து விட்டுச்சாதி வழக்கப் படி கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்துத்தான் போனேன்.
மருதாயி: என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டாயே!
சரோஜா: உங்களிடம் சொன்னால் நான் போவதற்கு சம்மதிப்பீர்களா? உடனே அவரிடம் விஷயத்தைச் சொல்லி...
மருதாயி: சரோஜா, என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?
சரோஜா: நம்பிக்கையா? எங்கிருந்தோ வந்த என்னை உடன் பிறந்த சகோதரியாக நினைத்து நீங்கள் நடத்தியதை நான் உயிருள்ளவரை மறக்க முடியுமா?
மருதாயி: நீ இங்கே இருந்தபோது என் இருண்ட வாழ்விலே கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. இப்போது பழையபடி எல்லாம் இருட்டாய்விட்டது. நீங்கள் இரண்டு பேரும் குடும்பம் நடத்துவதைப் பார்த்து சந்தோஷப்பட நான் கனவு கண்டுகொண்டிருந்தேன்.
சரோஜா: (ஏக்கத்தோடு) அக்கா, அதையெல்லாம் பேசி என்னபலன்? விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்று நீங்களே அடிக்கடி சொல்லுவீர்கள். இல்லாவிட்டால் இப்படிச் சிறு வயதிலேயே உங்களை விட்டுவிட்டு அவர் இறப்பாரா?
மருதாயி: அதை இப்பொழுது எதற்கு நினைக்கிறாய்? என் கதிதான் முன்னமேயே தீர்மானம் ஆகிவிட்டது. இப்பொழுது உன் விஷயத்திற்கு என்ன செய்யலாம்? சும்மா பேசிக்கொண்டேஇருந்தால் காரியம் மிஞ்சிவிடும்.
சரோஜா: திரும்பிப் போவதற்கு அடுத்த ரெயில் எப்பொழுது என்றுதான் பார்க்கவேண்டும். அதுதான் உடனே செய்யவேண்டியது.