உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யார் விளையாட்டு?

37

ராமசாமி : அவர்கள் அப்படி நல்லவர்களாக இருந்தும் அவருடைய புருஷர் கொஞ்சமாவது சந்தோஷமா இருந்தாரா?

தாயார் : அது அவன் தலையெழுத்து.

ராமசாமி: தலையெழுத்தா ? அப்படிச் சொல்லி உண்மையை மறைக்கப் படாது. அவருக்கென்னவோ தம் மனைவியிடத்தில் அன்பு ஏற்படவே இல்லை. என்ன காரணமென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் சாகிறபோது என்ன சொன்னார் தெரியுமா ?

தாயார்: என்ன சொன்னானோ, உனக்குத்தான் தெரியும்.நீ தான் அவன் பக்கத்தில்லேயே இருந்தாய்.

ராமசாமி : அவர் சொன்னது தெரியுமா ? 'நான் ஆசைப்பட்ட பெண் எனக்கு வாய்க்கவில்லை. கல்யாணத்தின்றே என் மனசு உடைந்து விட்டது. பிறகு உலகத்திலே எனக்குச் சுகமேது?' என்று சொல்லிக் கொண்டே உயிரை விட்டார்.

தாயார் : (சற்றுக் கோபத்துடன்) அதைப்பற்றி இப்பொழுது என்ன பேச்சு, ராமு?

ராமசாமி : அம்மா, நீங்கள் கொஞ்சம் நிதானமாகக் கேளுங்கள். அவர் மனம் உடைந்ததுபோல என் மனமும் உடைந்து போகும்.

தாயார்: (மேலும் கோபமாய்) அப்படியானால் பின் எதற்காக அன்றைக்குச் சரியென்று சொன்னாய்?

ராமசாமி: தினம் தினம் ஓயாமல் நீங்கள் செய்த தொந்தரவுக்காகத்தான்.

தாயார்: எப்போது சரியென்று சென்னாயோ, பிறகு பேசாமல் புறப்படு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/47&oldid=1675843" இலிருந்து மீள்விக்கப்பட்டது