பக்கம்:அழகு மயக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

ஒரு பத்துப் பக்கங்களிலே ஒருவனுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கை வரலாறு முழுவதையும் சுருக்கமாக எழுதிவிடலாம். பக்கங்கள் பத்துத்தானே என்று அதைச் சிறுகதை என்று சொல்லாமா? சொல்லக்கூடாது. சரியான சிறுகதையின் இலக்கணம் அது அல்ல. அதேபோலப் பெரிய நாடகத்தைச் சுருக்கி எழுதி விட்டால், அது ஒரங்க நாடகம் எனப்படும் சிறு நாடகமாகிவிடாது. காட்சிகளைக் குறைத்துவிடலாம் : அங்கம் ஒன்றாக இருக்கும்படி செய்யலாம். இருந்தாலும் அது ஒரங்க நாடகத்தின் இலக்கண அமைதியைப் பெற்று விடாது. சிறுகதைக்கு உள்ளதுபோலவே ஓரங்கத்திற்கும் தனி இலக்கணம் உண்டு.

ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதும், ஒன்றுக்கொன்று மாறுபட்டதுமான எத்தனையோ நிகழ்ச்சிகள் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணமான மன உணர்ச்சிகளும் எண்ணிலடங்காதவை. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் மனப் போக்கிலும் எத்தனையோ சுவை மிகுந்த கட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு தனிப்பட்ட அம்சத்தை விளக்குவதாக, அதைச் சுற்றிப் பின்னியுள்ளதாக ஓரங்க நாடகம் அமையவேண்டும்.

இவ்வாறு ஒரே அம்சத்தைச் சுற்றி நாடகம் அமைவதால் அதன் அளவும் பொதுவாகச் சுருங்கவேண்டி யிருக்கிறது. அதற்குள்ளே நாடகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனி உருவம் பெறவேண்டும் அவர்களின் மனப் பாங்கு வெளியாகவேண்டும். ஆகையால்தர்ன் ஒரங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/5&oldid=983163" இலிருந்து மீள்விக்கப்பட்டது