கணவன்
41
விஜயா: தாயம்மா, உன் புருஷன் எங்கே போய் விட்டான்? நான் எத்தனை தடவையோ கேட்டாயிற்து; சொல்லமாட்டாயா ?
தாயம்மான்: அதைச் சொல்லி என்ன லாபம்? என்னவோ என் தலையெழுத்தி!
விஜயா: எங்கள் விட்டிற்கு நீ வேலைக்கு வந்ததிலிருந்து எங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை தாயம்மா. முன்னாலே-ஐயோ, அந்த வேலைக்காரிகளிடம் எங்களுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.
தாயம்மாள்: வேலை செய்யவோ வத்தாச்சு. அதை ஒழுங்காகச் செய்யாமல் வேறென்ன சோலி?
விஜயா: நீ தான் அப்படி நினைக்கிறாய். எல்லாரும் அப்படி இல்லையே?
தாயம்மாள்: வீட்டு எஜமானிகளும் உன்னைப்போல நல்லவர்களாக இருக்கிறார்களா?
நான் முதலிலே ஓர் இடத்துக்கு வேலைக்குப் போனேன். அதுவும் பெரிய இடந்தான். அங்கே அந்த அம்மா படுத்தின பாடு.......
விஜயா: என்னவோ, நீ வீட்டுக்கு வந்தது நல்லதாயிற்று.
தாயம்மாள்: எனக்கும் இங்கே வேலை செய்வது பிடித்தமாக இருக்கிறது. என்னிடத்திலே நீ எத்தனை பிரியமாக இருக்கிறாய் அம்மாவும் அப்படித்தான்...ஆனால் இந்தச் சம்பளத்திலே எப்படிக் குடும்பம் பண்ணுவது?....என் னிடம் இருந்த ஒன்று இரண்டு நகையையும் விற்றாச்சு. இனி என்ன பண்ணுவேன்?
விஜயா: அப்பாவிடம் சொல்வி இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுக்கச் சொல்லுகிறேன். அப்பாவுக்கும் நீ வேலை செய்வதில் ரொம்பத் திருப்தி.