உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணவன்

43

விஜயா: தாயம்மா,நீ சிரித்துப் பேசினால் சந்தோஷமாக இருக்கிறது; என்னைக் கேர்பண்ணினாலும் பரவாயில்லை.

தாயம்மாள்: உன்னைப்போல யாரம்மா இருக்கப் போகிறார்கள்? உன்னைப் பார்த்துத்தான் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. இனி அந்தக் குடிசைக்குப் போனால் குழந்தை எப்படிக் கிடக்குமோ, அந்தச் சிறு பிள்ளைதான் என்ன சிரழிகிறாளோ........நான் போய் வரட்டுமா?

[தாயம்மாள் வேகமாகப் புறப்
படுகிறாள். அவள் முகத்
தில் கவலை படர்கிறது.
விஜயா அன்போடு பார்த்து
நிற்கிறாள்.]

காட்சி இரண்டு

காலை பதினொரு மணி ஆகப்போகிறது. ஓர் எளியகுடி சையின் உட்புறம். சுமார் எட்டு வயதுள்ள ஒரு பெண் கந்தல் பாயின்மேல் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். வறுமையின் அறிகுறி அக் குடிசை முழுவதும் காணப்படுகிறது. தாயம்மாள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறாள்.

தாயம்மாள் : பொன்னு, என்ன செய்கிறாய்?

பொன்னு: அம்மா, வந்திட்டாயா? தம்பி இப்பத்தான் தூங்கினான்.

தாயம்மாள் : அழுதானா?

பொன்னு : அம்மா, இந்நேரம் வரையிலும் சும்மா கத்து கத்துனு கத்தினான்....போம்மா, இந் நேரம் வரையிலும் என்ன பண்ணினாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/53&oldid=1679740" இலிருந்து மீள்விக்கப்பட்டது