உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணவன்

49

விஜயா: அடடா, இந்தப் புருஷர்களை நம்பவே கூடாது. கல்யாணம் செய்து கொண்ட உன்னை இப்படி விட்டு விட்டுப் போய்விட்டானே!
தாயம்மாள்: அவர்மேல் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.

[அவன் கண்ணில் கீர்த்துணி
பிதுக்குகிறது.]

விஜயா: தாயம்மா, உன்னை நினைத்தால் எனக்கும் அழுகையாக வருகிறது.

தாயம்மாள்: என்னவோ நான் செய்த வினை...அதுப வித்துத்தானே ஆகவேனும்?

விஜயா: உன் புருஷன் மகர பொல்லாதவனாக இருக்கிறான்.
தாயம்மாள்: அவரைக் குற்றம் சொல்ல எனக்கு மனசு வராது. நான் நல்லவளாக இருந்தால் அவருக்கு மனசு அப்படி என் போகிறது?
விஜயா: அவளை நீ பார்த்திருக்கிறாயா? உனக்குத் தெரியுமா, அவனை?
தாயம்மாள்: தெரியாமல் என்ன? தெரியும்.
விஜயா: அவள் உன்னைவிட ரொம்ப அழகா?
தாயம்மாள்: இதெல்லாம் யார் சொல்லமுடியும்? மனசுக்குப் பிடித்தால் அதுதான் அழகு.
விஜயா: தாயம்மா, புதிய வேலை ஒன்று இருக்கிறது.சம்பளம் அதிகமாகக் கிடைக்கும், போகிறாயா?
தாயம்மாள்: அப்படி என்னவாவது கிடைத்தால்தான் நான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/59&oldid=1691768" இலிருந்து மீள்விக்கப்பட்டது