50
அழகு மயக்கம்
விஜயா: அப்பாவுக்குக் தெரிந்தவர் ஒருத்தர் ரொம்பப் பணக்காரர். அவர் வீட்டிலே குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒர் ஆயான் வேணுமாம். நல்லவனாக இருந்தால் சம்பளத்தைப்பற்றி அவர்களுக்கு லட்சியம் இல்லை. மாசம் முப்பது ரூபாய் கொடுப்பார்களாம்; சாப்பாடும் அங்கேயே மூன்று வேளைக்கும்.
தாயம்மாள்: (ஆவலோடு) முப்பது ரூபாய் கிடைத்தால் என் கஷ்டம் தீர்ந்து போகும்.
விஜயா: அப்பாவிடம் சொல்லி உனக்குச் சிபாரிசுக் கடிதம் வாங்கித் தருகிறேன். அப்பா சிபாரிசு பண்ணினால் நிச்சயம் அந்த வேலை உனக்குக்தான். ஆனால் தாயம்மா, நீ எங்களை விட்டு விட்டுப் போகிறதினாலே, எனக்கு ரொம்ப வருக்கமாகத்தான் இருக்கும்.
தாயம்மாள்: எனக்குக்கூட உங்களை விட்டு விட்டுப் போக மனசில்லைதான். ஆனால் என்ன பண்ணுவது? எப்படியாவது அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேணுமே.
விஜயா: நான் இன்றைக்கே கடிதம் வாங்கித் தருகிறேன். நேரிலே அந்த விலாசத்துக்கு எடுத்துக்கொண்டு போய்க் கொடு. உடனே வேலை கிடைத்துவிடும். தாயம்மாள்: விஜயா, நீ சுகமாக இருக்கவேணும், நீ தான் எனக்குத் தெய்வம் போல...கடுதாசு எங்கே கொண்டு போகவேணும்?
விஜயா: அவர் தாம்பரத்திலே இருக்கிறாராம். எலக்டிரிக் ரெயிலிலே போனால் வீடு ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயாம்.
தாயம்மாள்: (யோசனையோடு) தாம்பாத்திலா?
விஜயா: ஆமாம். உனக்குச் சம்பளம் முப்பது ரூபாயும் குடியிருக்க ஒரு சின்ன வீடும் கொடுப்பார்கள். அங்கேயே இருக்கலாம்.