உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அழகு மயக்கம்


தாயம்மாள்: (சட்டென்று திரும்பிக் கோபமாக) யாரடி நீ? என்ன அக்கா வென்று கூப்பிட உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?

கமலம் : (சாத்தமாக) அக்கா, என்ன இப்படிக் கோபம் கொள்கிறாய்?

தாயம்மாள் : (மேலும் கோபமாக) உன்னைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பா வரும்?

கமலம் : என்னைக் கொஞ்சம் மனசிரங்கிப் பார்த்துப் பேசக்கூடாதா?

தாயம்மாள் : உன்னைப் பார்த்துப் பேசவேண்டிய அவசியம் இல்லை. உன் யோக்கியதைக்கு வெட்கமில்லாமல் பேச வேறு வந்துவிட்டாய்.

கமலம் : அக்கா, உனக்கு நான் என்ன செய்துவிட்டேன்? இப்படி....

தாயம்மாள்: (வெறுப்போடும் ஏளனத்தோடும்) நீயா?... நீ ஒன்றுமே செய்யவில்லை. என் குடும்பத்தைத்தான் நாசம் பண்ணினாய்....வேறொன்றும் செய்யவில்லை.

கமலம்: (இரங்கிய குரலில்) அக்கா, உன்னை விட்டு வரும்படி ஒரு நர்ன்கூட அவரிடம் நான் சொல்லவில்லை; அவரேதான் வந்தார்.

தாயம்மாள் : அவர் வந்தால், நீ எப்படியடி கூடக் குடியிருக்கச் சம்மதித்தாய்? நீ தானே அவர் மனசு கலைவதற்குக் காரணம்?

கமலம் : அக்கா, நான் சத்தியமாகச் சொல்லுகிறேன். உன்னைக் கெடுக்க எனக்குக் கொஞ்சக்கூட ஆசையில்லை. ஆனால் அவரை விட்டுவிட்டு இருக்க என்னால் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/62&oldid=1692781" இலிருந்து மீள்விக்கப்பட்டது