கணவன்
52
தாயம்மாள்: உனக்கு மாத்திரந்தான் முடியாது. தாலி கட்டியவளுக்கெல்லாம் முடியும். ஏன், அதுதானே நீ செல்லுவது?
கமலம் : நீ என்னவோ கோபமாகவே பேசுகிறாய், தயவு செய்து கொஞ்சம் யோசனை பண்ணிப் பார். அவருக்கும் என்னுடன் இருக்கத்தான் முதலிலிருந்து இஷ்டம்.
தாயம்மாள் : இஷ்டமாக இருந்தால் அப்பொழுதே போய்த் தொலையலாமே? அந்த இரண்டு குழந்தைகளைப் பெற்றத் தெருவிலே விட்டு விட்டு இப்ப்டிப் போவது நியாயமா?
கமலம் : அக்கா, உனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கு மென்று எனக்குத் தெரியும். என்னைப் போலத்தானே நீயும் அவரிடத்தில் ஆசை வைத்திருக்கிறாய்?
தாயம்மாள்: என் ஆசையைப்பற்றி யாருக்குக் கவலை? கடவுளுக்குத்தான் தெரியும். என்னுடைய நிலைமையிலே நீ இருந்தால் உனக்கு எப்படி இருக்கும்? அதை நினைத்துப் பார். இந்த எட்டு மாசமாக நான் படுகிற துன்பம் படைத்தவனுக்குக் கூடப் பொறுக்காது.
கமலம் : (கெஞ்சிய குரலில்) என்னவோ நினைத்துப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது, அக்கா. ஆனால் எங்களால் பிரிந்திருக்க முடியவில்லை.
தாயம்மாள்: (வெறுப்போடு) முடியாது...முடியாது... எப்படி முடியும்? நீங்கள் சுகமாக இருந்தால் போதும். அப்புறம் என்னவேணும்? ஊரிலே எல்லாரும் இப்படி இருந்தால் உலகம் உருப்பட்டுப் போகும்!
கமலம் : சுயகலந்தான். இல்லையென்று நான் எப்படிச் சொல்லமுடியும்? நீ இப்படி மனசு வெந்து பேசினால் நாங்கள் சுகப்படவே முடியாது.