உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அழகு மயக்கம்


வாசந்தி : கருணாவதிதேவி, இனி நீங்கள்தானே இந்தக் கோட்டைக்கு ராணி? உங்கள் உத்தரவை எல்லோரும் எதிர் பார்த்திருக்கிறார்கள்.

கருணாவதி : ஆமாம், நான்தான் கோட்டையைப் பாது காக்கவேண்டும். வாசந்தி, என் குழந்தை உதயசிங் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பானா? (அவள் குரலிலே கவலை தொனிக்கிறது.)

வாசந்தி : அவனைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

கருணாவதி : உன்னை ஒன்று கேட்க வேண்டுமென நினைத்தேன் மூன்று வருஷங்களுக்கு முன்பு ஹீமாயூனிடம் என்னுடைய கங்கணத்தைக் கொடுத்தாயே; அப்பொழுது அவர் என்ன சொன்னார்?

வாசந்தி : கங்கணத்தை ஏற்றுக் கொண்டவன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதாகத்தான் சொன்னார்.

கருணாவதி : ஹுமாயூன் உண்மை வீரரென்று தான் நினைக்கிறேன். ஆனால் இன்றைக்குச் செய்தி அனுப்பினால் அவர் வரும் வரையில் நாம் கோட்டையைக் காக்க முடியுமா என்பதுதான் சந்தேகம். எங்கே, அந்தக் தியோலி இளவரசர் பாக்ஜியை வரும்படி சொல்லியிருந்தேனே?

வாசந்தி : அதோ அவரும் வந்து விட்டார்.

[தியோலி என்ற சிறு நாட்டின்
இளவரசனான பாக்ஜிக்கு
வயசு 25-க்கு மேலிராது.
தியாக உணர்ச்சியோடு சித்தூ
ருக்கு உதவி செய்ய வந்திருக்
கிறான்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/76&oldid=1752033" இலிருந்து மீள்விக்கப்பட்டது