69
அழகு மயக்கம்
பாக்ஜி : அந்த தர்மம் சாஜபுத்திரனுக்குத்தான் தெரியும். இந்த மிலேச்சனுக்கு...
கருணாவதி: நான் அவரை அப்படித் தாழ்வாக மதிக்கவில்லை. அவர் ஒரு சுத்த வீரர்.
பாக்ஜி : அப்படி வருவதானாலும் ஹுமாயூன் இப்பொழுது வங்காளத்தில் நெருக்கடியான போரில் ஈடுபட்டிருக்கிறான். அங்கிருந்து இங்கு வர எத்தனை நானாகுமோ? அது வரை நாம் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா?
கருணாவதி : நான் முன்பே அவர் உதவியை நாட விரும்பினேன். ஆனால் ராணியம்மாள் அதற்கு இணங்கவில்லை. இன்று என் இஷ்டப்படி அவருக்குக் கடிதம் அனுப்பலாம் அல்லவா?
பாக்ஜி: உங்கள் ஆணைக்கு எதிர் தான் சொல்லமாட்டேன். ஆனால் தங்கள் கணவருக்கு நேர்ந்ததை எண்ணிப் பார்த்தால்........?
கருணாவதி : இன்று சித்தூரைக் காக்கவேண்டுமானால் வேறு வழி கிடையாது.
பாக்ஜி: ஹுமாயூன் வருவானென்று வைத்துக்கொண்டாலும், இன்னும் குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்கு நாம் பகதூரை உள்ளே புகவிடாமல் காக்க வேண்டும்.
கருணாவதி : ஆமாம்; நாளைக் காலையில் யுத்த முனைக்கு நான் செல்லுகிறேன். ராணி ஜவாஹர்பாய் பிடித்தலான் இன்னும் மங்கிப் போகவில்லை பல்லவா?
பாக்ஜி : கருணாவதிதேவி, நீங்கள் அர்ஜுனசிங்கின் வீரத் தங்கை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மீதியிருக்கும் நம் வீரர்களை முன்னின்று நடத்தும் பாக்கியம் எனக்குக் கிடைக்கக் கூடாதா?