உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கணம்

93


உங்களுடைய தலைமையிலே வேண்டுமானால் நான்கு மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம்.

கருணாவதி: இன்னும் ஒரு நாளைக்கு சமாளிக்க முடியுமானால் எனது எண்ணம் நிச்சயமாய் நிறைவேறிவிடும்.

பாக்ஜி: ஹுமாயூன் அதற்குள் வந்துவிடுவான் என்று நம்புகிறீர்களா?

[அவன் குரலில் ஐயம் தொனிக் கிறது.]

கருணாவதி : ஆமாம். அதில் உங்களுக்குச் சந்தேகமே வேணடாம்.

பாக்ஜி: தேவி, உங்கள் நம்பிக்கையைக் குலைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நாளைக்கு உச்சி வேளை வரையில் கூட நாம் சமாளிக்க முடியாதே?

கருணாவதி : ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கடிதம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அதனால் என்னுடைய நம்பிக்கை உண்மையாவதையும் நான் காணமுடிய வில்லை. இளவரசே, இனி அதை எண்ணுவதில் பயன் எது? நாளைக்கு நீங்கள் தலைமை பூண்டு போர் செய்ய வேண்டும். உமது கடமையைச் செய்ய வேண்டிய சமயம் வந்துவிட்டது.

பாக்ஜி : அதற்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

கருணாவதி : நாளைக்கு நம் வீரர்கள் குங்கும உடை தரித்துக் கோட்டை வாசலைத் திறந்துகொண்டு எதிரிகளின் மேல் பாயவேண்டும். பெண்களெல்லாம் தீப்பாயத் தயாராய் இருக்கிறார்கள்.

பாக்ஜி : கருணாவதி தேவி, கடைசி மூச்சு உள்ளவரை பகைவர்களின் தலைகள் ஆயிரம் ஆயிரமாய் நம் கோட்டைக்கு முன்னால் உருளச் செய்வேன். கடைசி வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/85&oldid=1760613" இலிருந்து மீள்விக்கப்பட்டது