உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அழகு மயக்கம்


லக்ஷ்மி: அவருக்குப் பிடிக்காவிட்டால் போகிறது. அப்பா இஷ்டப்படாததை நாம் என் இன்று புதிதாகச் செய்யவேண்டும்?

லலிதா: இருந்தாலும் ஒரு விருத்தாளி வரும்போது எல்லாம் அழகாக இருக்கவேண்டாமா?
லக்ஷ்மி: உனக்குத்தான் அந்த விருத்தானியைப்பற்றியே நினைப்பு. யார் அவரை இங்கே அழைத்தார்கள். தாமாகவே வருகிறவருக்கு இது போதும்.
லலிதா : அம்மா, மேஜையின்மேல் விரிப்பை விரித்துப் புஷ்பங்களை வைக்கட்டுமா? லகஷ்மி : (விருப்பம் இல்லாமல்) என்னவோ உன் இஷ்டம் போல் செய்.
லலிதா : (விரிப்பை விசித்துக்கொண்டே) ஏன் அம்மா, அப்பாவுக்குப் பிரியமில்லாததைச் செய்யவேண்டாமென்றாயே: அப்போது அப்பாவுக்குப் பிரியமானதை யெல்லாம் செய்வாயா?
லகஷ்மி: ஆமாம், நிச்சயமாகச் செய்வேன். அதில் என்ன சந்தேகம்?
லலிதா : அப்படியானால் நான் மிஸ்டர் மோகனிடம் சென்று அபிநயம் பழகிக்கொள்வதை அப்ப விரும்புகிறாரே, நீ ஏன் வேண்டாமென்கிறாய்?
லகஷ்மி :(சட்டென்று) அதி வேறு விஷயம், லலிதா.
லலிதா: ஆமாம்; உனக்கு இஷ்டம் இல்லாவிட்டால் அது வேறு விஷயமாகிவிடும்! லகஷ்மி : உனக்குச் சதா இதே பேச்சுத்தான். உன்னை நாட்டியம் பழகவிட்டதே தப்பென்று தெரிகிறது.
லலிதா: நீ மட்டும் கல்யாணமாகிற வரைக்கும் பழகிக் கொண்டிருந்தாயாமே? லகஷ்மி: ஆமாம். அப்படிப் பழகியதால்தான் அது பயனற்ற தென்று தெரிந்து வேண்டாமென்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/90&oldid=1765206" இலிருந்து மீள்விக்கப்பட்டது