உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புடமிட்ட பொன்

81

லலிதா : நாட்டியம் பயனற்றதா அம்மா? அதைப் பழகுவதால் உடம்பில் ஒரு லாகவம் ஏற்படும் என்று சொல்லுகிறார்களே?

லகஷ்மி: பள்ளிக்கூடத்தில் நாட்டியம் பயிலுவதே போதும்.

லலிதா : (மலர்களை அணிபெற வைத்துக்கொண்டே, நாட்டியம் ஒர் அற்புதமான கலையல்லவா? சிவபிரானே மகிழ்ந்து ஆடும்படியான.

லகஷ்மி: சரி சரி. இந்த வாதங்கனெல்லாம் எனக்குத் தெரியும். அப்பா கொடுக்கும் செல்லம் உன்னை இப்படி யெல்லாம் பேசச் சொல்லுகிறது.

லலிதா : அப்பா என்னைத் தவறான காரியம் செய்யும் படியாகவா சொல்லுகிறார்?

லகஷ்மி: அவர் என்னவேண்டுமானாலும் சொல்லுவார்; இந்த உலகத்திலே பெண்களுக்குப் பூரண சுதந்தாம் கொடுப்பவர் அவர் ஒருவர்தானே?

லலிதா: உனக்குத்தானே கொடுக்கிறார்?

லகஷ்மி: ஆமாம், கொடுத்து என்ன செய்வது? தாய்க்கு அடங்காத பிள்ளையாக உன்னைச் செய்துவிடுகிறார்.

லலிதா : ஆமாம்,நான் உன் வார்த்தையை மீறி என்ன செய்துவிட்டேன்? மிஸ்டர் மோகன் இந்த ஊரில் இருக்கும் வரை சாவகாசப்பட்ட சில மாலை வேளைகளில் அவரிடம் சென்று சில பாடல்களுக்கு அபிநயம் பிடித்துப் பழகிக்கொள்ள உன்னை அனுமதிதானே கேட்கிறேன்? உன்னை மீறி ஒடிப் போகவில்லையே?

லகஷ்மி: அதுதான் வேண்டாமென்கிறேனே, லலிதா.
லலிதா : அம்மா, ஏன் இப்படிப் பிடிவாதமாகப் பேசுகிறாய்? நாட்டியக் கலையின்மேலுள்ள ஆசையால்தான்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/91&oldid=1765681" இலிருந்து மீள்விக்கப்பட்டது