புடமிட்ட பொன்
89
மோகன்: நாளைக்கும் அந்த நாடகம் நடக்கிறது.
மாதவன்: சரி. அவசியம் நாளைக்கே வருகிறேன் லஷ்மி, போகலாமா?
லக்ஷ்மி: லலிதா, இந்தா...........இந்தப் பலகாரத்தை எல்லோருக்கும் வை.
மோகன்: மாதவன், லலிதாவையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். முன் வரிசையில் எல்லோருக்கும் ரிஸர்வ் செய்யச் செல்லுகிறேன். அந்த நாடகத்தில் வசந்த மாதவியின் நாட்டியத்தை லலிதா அவசியம் பார்க்க வேண்டும்.
லலிதா: வசந்த மாதவியா? யார் அது?
மோகன்: அவள் புதிதாக என்னிடம் நாட்டியம் பழக வந்திருக்கிறாள். உன்னுடைய 'கிளாஸ் மேட்' என்று சொன்னானே?
லலிதா: அவளா? அவள் என் சிநேகிதி அல்லவா?
மோகன்: அப்படியா? ஆப்போது நீ அவசியம் அவளுடைய நடனத்தைப் பார்க்க வேண்டும். ம்.......மாதவன், லலிதா சில பாடல்களுக்கு என்னிடம் அபிநயம் பழகிக் கொள்ள விரும்புகிறாளே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மாதவன்: எனக்குச் சம்மதந்தான்.
மோகன்: அப்படியானால் அவளைக் தினமும் மாலை வேளையில் அனுப்புகிறீர்களா?
மாதவன்: அவளுக்கும் லஷ்மிக்கும் சம்மதம் என்றால் அப்படியே செய்யலாம்........என்ன லக்ஷ்மி?
லஷ்மி: பார்க்கலாம்; இப்பொழுது என்ன அவசரம்?
மாதவன்: என்ன அவசரமா? மோகன் எப்பொழுதும்
இங்கு இருப்பாரா?
லக்ஷ்மி: இல்லாவிட்டால் போகிறது.