பக்கம்:அழியா அழகு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அழியா அழகு

அதை வளைத்தவர் இல்லே. சீதை தலை வனத்துக் கழுத்தை நீட்டும் ஆடவன் இன்னும் வரவில்லை. இராமன் சீதைக்குக் கணவகுைம்படி நேரக் கூடாதா என்று ஆசைப்படுகிருன், ஜனகன், இராமனுடைய தோளைப் பார்க்கிருன்.

அறிவிற் சிறந்த முனிவராகிய விசுவாமித்திரர் அதைக் கவனிக்கிருர் "பார், கன்ருகப் பார்; இவனுடைய புய வலியை ஊடுருவிப் பார். அலேமயமாக இருக்கிற நீல நெடுங் கடலே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று தோன்றும் இந்த வீரனுடைய தோளின் செறிவையும் உயர்வையுமே நீ காணலாம் என்னுடைய கண்ணேக்கொண்டு பார்த் தால் இந்தத் தோள்களின் பெருமை கன்ருக விளங்கும். அவை ஒரு கதையையே சொல்லும்!"

அலஉருவக் கடல்உருவத்து

ஆண்டகைதன் நீண்டுயர்ந்த நிலைஉருவப் புயவலியை

நீஉருவ கோக்கையா!

"இந்தத் தோள்களில் திாடகை வதக் கதையை கான் காண்கிறேன். இரும்பு காய்ச்சும் உலேயைப் போல இருந்தன. அந்த அரக்கியின் கண்கள். கனலே உமிழும் அந்தக் கண் பட்ட இடமெல்லாம் பாழ்தான். அவள் மேலே இராமன் ஓர் அம்பை விட்டான். அவளுடைய வயிரக் குன்றக் கல்லேயொத்த மார்பிலே அது தைத்தது தைத்ததா? அன்று, குத்தி உள்ளே சென்றது. சென்று. அங்கே தங்காமல் ஊடுருவிப் போய் முதுகின் வழியே வந்தது. அப்பால் ஒரு மலேயை ஊடுருவிச் சென்றது. அப்போதும் அதன் வேகம் குறையவில்லை. அருகில் இருக்த பச்சை மரத்தையும் உருவி மண்ணுக்குள் புகுந்து கொண்டது. இவன் தோளின் வலிமை அது. என் கண்ணுலே கண்ட காட்சியை கான் சொல்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/10&oldid=523212" இலிருந்து மீள்விக்கப்பட்டது