பக்கம்:அழியா அழகு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகொண்ட குகன் 99.

"ஊனும் உறையுளும் திருவுள்ளத்துக்கு உகப்பாகச் செய்வேன்' என்ருன். மீனும் தேனும் முன்பு கொணர்ந்த வன் இராமனுடைய இயல்பை அறிந்து கொண்டமையால்

இங்கும், கனியும் காயும் தேனும் தருவேன்' என்ருன்.

இராமனுடன் வருவதற்கு இசைவு கிடைத்து விட்ட தென்ருல் குகன் இவ்வளவுதான செய்வான்? ஏதாவது திங்கு தேர்ந்தால் அவற்றைப் போக்குவான். எந்தக் காடு இராமன் தங்குவதற்கு ஏற்ற தூய்மையை உடைய தென்று தேடிக் கண்டுபிடித்து வருவான். என்ன பொருள் வேண்டுமோ, அதையும் தேர்ந்து கொண்டுவந்து தருவான். எந்த வேலையானலும் செய்வான். இருட்டாக இருந்தாலும் காட்டினூடே நுழைந்து செல்வான்.

இவற்றைக் குகன் சொன்னன். காட்டு வாழ்க்கை இராமனுக்குப் புதிது; ஆல்ை குகனுக்குப் பழையது. அவனுக்கு அங்கே உள்ள கலம் தீங்குகள் எல்லாம் என்ருகத் தெரியும். ஆகவே அவற்றை ஒவ்வொன்ருக அடுக்கிச் சொன்னன்.

மலைமேலே சென்று கவலைக்கிழங்குகளைத் தோண்டி வருவேன். நெடுந்துாரம் செல்வேன். நல்ல நீர் எங்கிருந் தாலும் கொண்டுவந்து தருவேன். எனக்குப் பாதுகாப்பாகப் பல வில்கள் இருக்கின்றன. எதற்கும் அஞ்சமாட்டேன். பகலும் இரவும் உங்கள் திருவடிகளைப் பிரியாமல் இருப்பேன்.”

கல்லுவன் மலைமேலும்

கவலையின் முதல்யாவும்: செல்லுவன் கெறிதுரம்:

செறிபுனல் தரவல்லேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/107&oldid=523309" இலிருந்து மீள்விக்கப்பட்டது