100 அழியா அழகு
வில்லினம் உளென்; ஒன்றும்
வெருவலன்; இருபோதும்,
மல்லினும் உயர்தோளாய்!
மலரடி பிரியாதேன்,' "
(கல்லுவன் - தோண்டுவேன். கவலை - ஒரு கொடி. முதல் - கிழங்கு. வில் இனம் - பல விற்கள். வெருவலன் - அஞ்சேன்.)
'ஏதோ என் ஆற்றலை விரித்துரைப்பானைப் போலச் சொன்னலும், தங்களைப் பாதுகாக்கும் திறமை உடையவன் என்ற எண்ணத்தால் இவைகளே நான் சொல்லவில்லை. தங்களுக்கு அடியேன் செய்யும் குற்றேவல் வகைகளேயே சொன்னேன். தங்களைப் பாதுகாக்க நான் யார்? தங்கள் தோள்வலியை கான் நன்கு உணருவேன்” என்று உணர்த்து வானப் போல, இடையே, 'மல்லினும் உயர்தோளாய்' என்று விளிக்கிருன், மற்போர் செய்வார் தோளேவிடப் பருமையும் வலிமையும் படைத்தது இராமன் தோள்.
இவ்வளவும் செய்வது எதற்காக? அவனைப் பிரியாமல் இருப்பதற்காக, அதல்ை, மலரடி பிரியாதேன்' என்று. இறுதியில் வைத்துப் பேசினன்.
மேலும் அவன் ஒன்று கூறினன். 'என்னே உடன் வரப் பணிப்பதோடு, தங்கள் திருவுள்ளத்துக்கு உகப் பால்ை என் சேனேயையும் வரப் பணித்தால் உடன் கொண்டுவருவேன். இரவும் பகலும் விட்டு நீங்காமல் உடன் தங்குவேன். யாரேனும் பகைவர்கள் வந்தால், அவர்களோடு போரிடுவேன்; பகைவர் வலியரானல் என்னேயே முதற்பலியாகக் கொடுப்பேன். என்னிடத்தில்
1. கங்கைப். 66