விடை கொண்ட குகன் 10 :
பழிக்குரிய ஒரு செயலும் இல்லை. ஆகவே இத்துணே கார கணங்களால் நானும் உடன் வருகிறேன்."
" திருவுளம் எனின்.மற்றென்
சேனையும் உடனேகொண்டு
ஒருவலென், இருபோதும்
உறைகுவன்; உளராளுர்
மருவலர் எனின்முன்னே
மாள்குவன்; வசையில்லேன்;
பொருவரு மணிமார்பா!
போதுவென் உடன்'என்ருன், !
(ஒருவலென் . நீங்காமல், மருவலர் உளரானர் எனின் - பகைவர் உண்டானல். போதுவென் - வருவேன் )
'உங்களோடு இருந்து வாழ்வதையே வாழ்வாகக் கருது கிறேன். உங்களுக்குத் தீங்கு வருமாயின், அது கண்டு சும்மா இரேன். அது என் வலிமைக்கு அடங்காதென்ருல் என் உயிரையும் ஈ.வேன்' என்ருன், சுமித்திரை இலக்கு வனைப் பார்த்து, நீ இராமனுடன் போ' என்றபோது,
" மன்னும் ககர்க்கே இவன்வக் திடின் வா; அதன்றேல் முன்னம் முடி' " என்ருள். குகன் சுமித்திரை கூறியதைக் கேட்டவன் அல்லன். ஆனல் அவன். சிந்தனையாலும் அன்பாலும் இலக்குவைேடு ஒத்த தம்பியாகும் தகுதியுடையவன். ஆதலின், அவள் அங்கே இலக்குவனுக்குச் சொன்னதை இங்கே குகன் சொல்கிருன்.
1. கங்கைப். 67
2. நகர்,நீங்கு. 151