வடிவு கண்டவர் 3
உலேயுருவக் கனல்உமிழ்கண்
தாடகைதன் உரம்உருவி மலேஉருவி மரம்உருவி
மண்உருவிற் ருெருவாளி. ' [2 & உருவக் கனல் உமிழ் கண் - உலையில் உள்ள பெருங் கனலே உமிழும் கண், உரம் - மார்பு.)
விசுவாமித்திரர், மேலே அந்த அரக்கியின் மக்களில் ஒருவன் ஒரம்பால் வான் புக்கான் என்றும், மற்ருெருவன் போன இடம் தெரியவில்லை என்றும் கூறி, இராமனுடைய .பு பவலியைச் சொல்கிருர்,
பிறகு சுருக்கமாக அகலிகையின் சாபத்தைத் தீர்த்த தாள் வலியைச் சொல்கிருர்,
கோதமன்தன் பன்னிக்கு
முன்னைடருக் கொடுத்ததிவன் போதுகின்ற தெனப்பொலியும்
பொலங்கழற்கால் பொடிகண்டாய்! " (பன்னி - பத்தினி, மனைவி. பொலங்கழற்கால்.பொன்ன லாகிய வீரகண்டையை அணிந்த அடி) - -
இவ்வாறு விசுவாமித்திரர் இராமபிரானுடைய வீரச் செயலேயும் அருட்செயலேயும் ஜனகனது அவையிலே எடுத் .துரைத்தார் அதைக் கேட்டோர் பலர் -
இராமன் வில்லை வளைப்பான் என்று விசுவாமித்திரர் கூறவே ஜனகனுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. சிவதனுசைப் .பல வீரர்கள் கொண்டுவந்து வைக்கிருர்கள். இராம னுடைய அழகை கேரிலே பார்த்தும் அவனுடைய பெருமையை விசுவாமித்திரர் வாயிலாகக் கேட்டும்
1. குலமுறை கிளத்து படலம், 28. 2. Съј 20.