பக்கம்:அழியா அழகு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம்

கம்பராமாயணத்தில் வரும் குகன், உணர்ச்சி உரு வாக இருக்கிருன். சிலருக்குக் கோபம் வந்தாலும் ஒரேயடியாக வரும்; வருத்தம் வந்தாலும் உச்ச கிலே யில் வரும்; வியப்புணர்ச்சி தோன்றிலுைம் மிகுதியாக இருக்கும். குகன் அத்தகைய மனப்பாங்குடையவன். இராமனேக் கண்டபோதே உணர்ச்சி வசப்பட்டு, "உன்னே இப்படிக் கண்ட கண்களைப் பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறேனே! என்று அங்கலாய்த்தான், இராமனிடத்தில் உண்டான அன்பு, மிக விரைவில் உரம் பெற்றது.

இராமனே ஆற்றைக் கடத்திவிட்ட பிறகு குகனப் பரதைேடு வைத்துக் காட்டுகிருன் கம்பன். குகப் படலம் என்னும் பகுதியில் குகனும் பரதனும் சக்திக்கும் விகழ்ச்சி விரிவாக வருகிறது. அதில் பரதனுடைய பெருமையே சிறப்பாக மணக்கிறது. ஆயினும் அந்தப் பெருமை வெளிப்படக் குகன் ஒரு கருவியாகிருன்.

குகப்படலத்தில் குகனுடைய உணர்ச்சி இருவேறு திசையில் ஓங்கி விற்கிறது. முதலில் கோபக் கோலத்தில் 'குகன் காட்சியளிக்கிருன், பிறகு பரதனிடம் அளவற்ற மதிப்பை வைக்கும் கிலேக்கு மாறி விற்கிருன்.

இலக்குவன் வாயிலாக, இராமன் காட்டுக்குப் போக நேர்ந்த வரலாற்றைக் கேட்டவன் குகன். ஆகவே கைகேயியினிடமும் பரதனிடமும் அவனுக்கு அப்போதே சினப்பொறி முளைத்தது. அது வளர்வதற்குரிய செவ்வி ஒன்று நேர்ந்தது. பரதனும் கங்கைக் கரைக்கு வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/113&oldid=523315" இலிருந்து மீள்விக்கப்பட்டது