112 அழியா அழகு
னுக்கும் வாலாட்டும் நாயைப்போல இவன் மயங்கிப் போய். வழி விட்டிருப்பான்' என்று உலகத்தார் எண்ணுவார்க. ளாம்,
வடகரையிலிருந்து வரும் படைகள் தென் கரைக்கு. வரவேண்டுமானல் குகனுடைய துணைவேண்டும். அவன் ஒடம் விட்டால்தான் கங்கையைக் கடக்க இயலும், என் கையில் இருக்கிறது. சாவி. என்னை விட்டு இவர்கள் எங்கே: போவார்கள்?' என்ற எண்ணம் அவனுக்கு இருக்கிறது.
கங்கையை அவர்களால் கடக்க முடியுமா? அது. ஆழமான ஆறு. இருந்தாலும் ந்ேதிக் கடக்கலாம் என்ருலோ மீண்ட அலைகள் ஆளேச் சுருட்டிக் கை தளரச் செய்யும். ஆகையால் அந்த ஆழ நெடுந்திரை ஆறு கடந்து அவர்க ளால் செல்ல முடியாது.
"ஆழ கெடுக்திரை ஆறு
கடக்திவர் போவாரோ?”
ஒடத்தில் ஏறிப் போகவேண்டுமானல் குகன் அவர்களை ஏற்றிவிட வேண்டும். ஒருகால் அவர்களுடைய படைப் பலத்தைக் கண்டு அவன் அஞ்சி ஏற்றிவிட்டால் அவர்கள் கடக்கலாம். அது கடக்கக் கூடியதா? யானையோடு வரும் பெரிய படையானல் என்ன? அவன் வில்லைக் கையிலே, பிடித்த வீரன் அல்லவா?
'வேழ கெடும்படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ!' (விலங்கிடும் - வழி விலகி இடங்கொடுக்கும்.) இவ்வளவு சினம் பரதன்மேல் வருவதற்குக் காரணம்,
இராமன் குகனேயும் தோழன் என்று கூறி ஆட்கொண்ட கருஅன. அவன் சொன்ன ஒரு சொல் மாருத சொல்; உலகம்