குகன் சீற்றம் 115
இங்கேயே இருந்தது நல்லதாகப் போய் விட்டது என்னு டைய கடமையை இன்றே கழிப்பேன்.'
இவ்வாறு சீற்றம் பொங்க கின்ற குகன் இது வரையில் தானே பேசிக்கொண் டிருந்தான். பிறகு தன் அருகில் கின்ற தன் துணைவர்களைப் பார்த்துப் பேசலான்ை.
'யானையும் குதிரையும் நெருங்கிய இந்தப் பெரிய படை சூழ வரும் இவர்கள் வாள்வலியை இந்தக்கங்கையைக் கடந்த பிறகல்லவா காட்ட வேண்டும்? என்னைப்போலவே கோபம் கொண்டுள்ள வேடர்களே, ஒடங்களைத் துறையி லிருந்து விலக்கிவையுங்கள். நம்முடைய தலைவனுகிய இராமபிரானுக்கு முன்னலே காம் நம் உயிரை விடும்படி நேர்ந்தாலும் அது நன்றல்லவா?
"முன்பு போன வீரர்களாகிய இராம இலக்குவர் களுக்கு இந்தப் படை எந்த மூலே? இந்த இரை போதாது. எனக்குங்தான் சரி, இது ஒரு பொருளா? இந்தச் சேனை கிடக்கட்டும். தேவரே வந்தாலும் வில் என்னும் மேகத்தி லிருந்து சோனமாரியாக அம்புகளைப் பொழிந்து, குடர்க ளெல்லாம் குறைக்காற்றில் அடிபடுவனபோலப் பறக்க, சுடருகின்ற வாள் முதலிய படைக்கலங்களோடு படையினர் படவும், சிறந்த யானைகள் வீழவும் சேனைக் கூட்டத்தை கான் சாய்த்துவிட மாட்டேன'
குகனுடைய பேச்சில் வரவரக் கோபம் மிகுதியாகிறது. ஓசை வெடித்துவருகிறது. கம்பனுடைய சொல்லாட்சியும் சந்தமும் அந்த மிடுக்கை ஒலியினலேயே புலப்படுத்து .கின்றன.
1. குகப்படலம், 16 - 8